பக்கம்:கம்பன் கவித் திரட்டு 4, 5, 6.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

144



இராவணன் பார்க்கின்ற திசைகளிலே எல்லாம் இருக்கின்ற தளிர், அரும்பு, மலர், கொம்பு, அடிமரம் முதலிய எல்லாம் கருகிப் போகும்படியாக தீ கக்கும் பெருமூச்சு விட்டுக்கொண்டு வந்தான்! சீதாதேவி எங்கே இருக்கிறாள் என்பது அவனுக்குத் தெரியும். தெரிந்தாலும் விரக வேதனையால் புத்தித் தடுமாறி நாகரத்தினத்தை இழந்துவிட்டுத் தேடும் பத்து தலைப் பாம்பு போல் ஒவ்வோரிடமாகத் திரிந்து திரிந்து வந்தான்.

***


விரி தளிர் - விரிந்து விளங்கும் தளிர்களும்; முகை - அரும்புகளும்; பூ - மலர்களும்; கொம்பு - கிளைகளும்; முதல் - அடி மரமும்; வேர் - வேர்களும்; இவைஎலாம் - ஆகிய இவை எல்லாம்; மணி பொன்னால் வேய்ந்த - மணிகளாலும் பொன்னாலும் வேய்தன போன்ற; தரு உயர்சோலை - மரங்கள் உயர்ந்து விளங்கிய அச் சோலை; திசைதொறும் - இராவணன் பார்க்கின்ற திசைகளில் எல்லாம்; கரிய - கருகிப் போகும்படி; தழல் உமிழ் உயிர்ப்பு முன் தவழ - தீ கக்கும் பெருமூச்சு தன் முன்னே தவழ்ந்து செல்ல; திருமகள் இருந்த திசை - திருமகளாகிய சீதாபிராட்டி இருந்த இடத்தை; அறிந்திருந்தும் - தான் அறிந்திருந்தும்; திகைப்பு உறு சிந்தையால் - விரக வேதனையால் புத்தித் தடுமாறி; கெடுத்தது ஒரு மணி தேடும் - கெட்டுப் போக்கிய ஒப்பற்ற நாகரத்தினத்தைத் தேடிசெல்லும்; பஃறலை அரவின் - பல தலைகள் கொண்ட பாம்பு போல; உழைதொறும் உழைதொறும் - ஒவ்வோரிடமும் விடாமல்; உலாவி - உலாவிக்கொண்டு.

***


இவ்வாறு கோலாகலமாக வந்தான் இராவணன். வந்து என்ன செய்தான்? தனது தலைகள் பத்தும் மணிக்கிரீடமும் தரையிலே பதியச் சாஷ்டாங்கமாக நமஸ்காரம்