பக்கம்:கம்பன் கவித் திரட்டு 4, 5, 6.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

152

விட்டானோ; (அல்லது) முன்னை ஊழ்வினை முடித்ததோ - முற்பிறப்பில் செய்த கரும வசத்தால் இவ்வாறு நிகழ்ந்ததோ; என்னை - என்னவோ தெரியவில்லையே; என்று என்று முறையால் - ஒன்று ஒன்றன்பின் ஒன்றாக திரும்பத் திரும்பப் பலமுறை; பன்னி - சொல்லிச் சொல்லி; வாய் புலர்ந்து - நா வறண்டு; உணர்வு தேய்ந்து - அறிவு சோர்ந்து - ஆருயிர் பதைப்பாள்.

***


வன் கண் வஞ்சனை அரக்கர்
       இத்துணைப் பகல் வையார்
தின்பர்; என் இனி செய்யத் தக்கது
       என்று தீர்ந்தானோ?
தன் குலப் பொறை தன் பொறை
       எனத் தணிந்தானோ?
என் கொல் எண்ணுவது? என்னும்
       அங்கு இராப்பகல் இல்லாள்.

கொடியவர்களான இந்த அரக்கர்கள் உயிரோடு இத்தனை நாள் என்னை வைத்திருக்க மாட்டார்கள் என்று கருதினாரோ? கொன்று தின்று விடுவார்கள் என்று எண்ணினாரோ? இனி என்ன செய்யமுடியும் என்று சும்மா இருந்து விட்டாரோ? என்று புலம்புகிறாள்.

இரவு என்றும் பகல் என்றும் அறியாமல் கவலையால்— உறக்கமின்றி ஏங்குகிறாள்.

***

வன்கண் - கொடிய தன்மையுடைய; வஞ்சனை - வஞ்சகம் மிக்க; அரக்கர் இத்துணைப் பகல் வையார் - இவ்வளவு நாள் உயிருடன் வைத்திருக்க மாட்டார்; தின்பர் - கொன்று தின்றிருப்பர்; என் இனிச் செய்யத்-