பக்கம்:கம்பன் கவித் திரட்டு 4, 5, 6.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

154

கொண்டு; என் உயிரையும் போற்றினேன் - என் உயிரையும் போக ஒட்டாது தடுத்து பாதுகாத்தேன். (ஆயினும்) நிறை இரும் பல பகல் - நிறைந்த மிகப் பல நாளாக; நிருதர் நீள் நகர் - அரக்கரது பெரிய நகரில்; சிறை இருந்தேனையும் - சிறை இருந்த என்னை; அப் புனிதன் தீண்டுமோ - பரிசுத்தனாகிய அந்த இராமன் மீண்டும் ஏற்பாரோ?

***


என்று என்று உயிர் விம்மி
        இருந்து அழிவாள்
மின் துன்னும் மருங்குல்
        விளங்கு இழையாள்
ஒன்று என் உயிர் உண்டு
        என்ன உண்டு இடர்; யான்
பொன்றும் பொழுதே
        புகழ் பூணும் எனா

இவ்வாறு கருதிக் கருதிக் கண்ணிர் வடிப்பாள்; விம்முவாள்; ஏங்குவாள்.

“என் உயிர் இருக்கும் வரை இத் துன்பம் நீங்காது. என் உயிர் நீங்கினால் தான் எனக்குப் புகழ் உண்டாகும்” என்று நினைக்கிறாள்.

***

மின் துன்னும் மருங்குல் - மின்னல் போல் இடையும்; விளங்கு இழையாள் - ஒளி விளங்கும் அணியும் உடைய சீதை; என்று என்று-என்று பலவாறாகக் கூறி; உயிர் விம்மி - பெருமூச்சு விட்டு; இருந்து - இடம் விட்டுப் பெயராமல்; அழிவாள் - வருந்துபவளாய்; என் உயிர் ஒன்று உண்டு எனின் - எனது உயிர் ஒன்று மட்டும் இந்த உடலில் இருக்குமானால்; (உயிர் இருக்கும் வரை) இடர் உண்டு - துன்பம்