பக்கம்:கம்பன் கவித் திரட்டு 4, 5, 6.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

171

இந்த உலகிலே பிறந்து இராமபிரானின் திருமேனியைத் தழுவும் பாக்கியமுள்ளதொரு வரம் தருமாறு அவரை வேண்டினேன் என்று சொல்.

***

ஈண்டு - இந்த இலங்கையிலே; யான் இருந்து - நான் சிறை மீட்கப்படாமல் இருந்து: இன் உயிர் மாயினும் - இனிய உயிர் நீங்கி மாண்டு போயினும்; மீண்டு வந்து பிறந்து - மறுபடியும் உலகில் நான் பிறந்து; தான் மேனியை தீண்டலாவது - அப் பெருமானுடைய திருமேனி தழுவி மகிழும்படியான; ஓர் தீவினை தீர் வரம் - ஒரு நல்ல பாக்கியமுள்ள வரம்; தொழுது வேண்டினாள் - வணங்கிக் கேட்டுக் கொண்டாள்; என்று விளம்புவாய் - என்று நீ விண்ணப்பம் செய்வாயாக.

***

எந்தையர் முதலினர்
         கிளைஞர் யார்க்கும் என்
வந்தனை விளம்புதி
         கவியின் மன்னனைச்
சுந்தரத் தோளைனை
        தொடர்ந்து காத்துப் போய்
அந்தமில் திரு நகர்க்கு
        அரசனாக்கு என்பாய்.

எனது தந்தைக்கும் இதர சுற்றத்தினருக்கும் எனது வணக்கத்தைத் தெரிவிப்பாயாக, இராமபிரானைத் தொடர்ந்து பாதுகாத்து அயோத்திக்குப் போய் அங்கே அவருக்கு முடிசூட்டுமாறு சுக்கிரீவனை நான் கேட்டுக் கொண்டதாகச் சொல்.

***