பக்கம்:கம்பன் கவித் திரட்டு 4, 5, 6.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

183

தோற்றமும்; கரந்து - மறைத்து; நண்ணினாய் - இங்கு வந்தாய்.

***

யாரை நீ? என்னை இங்கு
         எய்து காரியம்?
ஆர் உனை விடுத்தவர்?
        அறிய ஆணையால்
சோர்விலை சொல்லுதி
        என்னச் சொல்லினான்
வேரொடும் அமரர் தம்
        புகழ் விழுங்கினான்.

“யார் நீ? இங்கு எதற்காக வந்தாய்? உன்னை ஏவியவர் யார்? அறியும்படி சொல். இது என் கட்டளை” என்றான் தேவர் புகழை வேரோடும் விழுங்கிய இராவணன்.

***

யாரை நீ - சொன்ன இவர்களில் யார் நீ; இங்கு எய்து காரணம் என்னை - இங்கு வந்ததன் காரணம் யாது? ஆரி உனை மிடுத்தவர் - உன்னை அனுப்பியவர் யார்? அறிய - நான் அறிய விரும்பி; ஆணையால் - நான் இடும் கட்டளை; சோர்வு இலை - தவறுதல் இல்லாமல்; சொல்லுதி - சொல்வாயாக; என்னைச் சொல்லினான் - என்று அநுமனை நோக்கிக் கூறினான்; வேரொடும் அமரர் தம் புகழ் விழுங்கினான் - தேவர்களது புகழை அடியோடு விழுங்கியவனான இராவணன்.

***

சொல்லிய அனைவரும்
        அல்லேன்; சொன்ன அப்
புல்லிய வலியினோர்
        ஏவல் பூண்டிலேன்