பக்கம்:கம்பன் கவித் திரட்டு 4, 5, 6.pdf/240

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

230

இடத்திலே சார்ந்துவிட்டாய்; வஞ்சனை மனத்தினை - மனத்திலே வஞ்சனையுடையவனே; பிறப்பு மாறினை - அரக்கனாகப் பிறந்தும் அந்த அரக்க ஒழுக்கம் மாறிவிட்டாய்; நஞ்சினை விஷம் உள்ள பாம்பை; உடன் கொடு - உடன் வைத்துக்கொண்டு; வாழ்தல் நன்மையோ,

***

“பழியினை உணர்ந்து, யான்
       படுக்கிலேன், உனை;
ஒழி, சில புகலுதல்;
       எல்லை நீங்குதி;
விழி எதிர் நிற்றியேல்,
       விளிதி” என்றனன்,
அழிவினை எய்துவான்
       அறிவு நீங்கினான்.

“உன்னை நான் கொன்று போடுவேன். தம்பியைக் கொன்ற பழி வருமே என்பதால் கொல்லவில்லை. எனக்குப் புத்தி சொல்வதை ஒழி. விரைவில் போ. என் கண்முன் நில்லாதே. நின்றால் கொன்று விடுவேன்!” என்றான் அழிவு காலத்தை அடைந்துவிட்ட அறிவிலி இராவணன்.

***

பழியினை உணர்ந்து - உடன் பிறந்தவனைக் கொன்ற பழி வருமே என்று உணர்ந்து; உனை யான் படுக்கிலேன் - உன்னை நான் கொல்லவில்லை; சில புகலுதல் ஒழி - எனக்குப் பிடிக்காத சில சொற்கள் கூறுதலை ஒழித்து; எல்லை நீங்குதி - உடனே ஒடிவிடு; விழி எதிர் நிற்றியேல் - என் கண்முன் நின்றால்; விளிதி - (என் கையால்) இறந்து படுவாய்; என்றனன் - என்று கூறினான்; அழிவினை