பக்கம்:கம்பன் கவித் திரட்டு 4, 5, 6.pdf/261

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

251

னிடத்துத் தங்கும் உயிர்குயிராய் இருப்பவனும் நீயே; வாழியாய் – என்றும் அழியாது வாழ்ந்திருப்பவனே! நின்னை அடியேன் மறப்பேனா? – நின்னை அடியேனாகிய நான் மறப்பேனா? வயங்கு செந்தீ சூழுற உலைந்து போனேன். ஒளியுடன் விளங்குகின்ற சிறந்த நெருப்பானது என்னைச் சூழ்ந்து; பொருந்த - மனம் வருந்தலானேன்; காத்தருள் - புரந்தருள்வாயாக.

***

இராமனைப் பலவாறு துதித்தான் வருணன். இராமபிரானும் சீற்றந் தணிந்தான். வருணனுக்கு அபயம் தந்தான். வருணன் தான் கட்டளைக்குப் பணியாத காரணத்தைக் கூறினான்.

“எடுத்த கணை சும்மா விடாது. எனவே இந்த பிரமாத்திரத்திற்கு ஒரு இலக்கு காட்டு” என்றான் கோசலை மகன். வருணனும் இலக்கு ஒன்றைக் காட்டினான். பிரம்மாத்திரத்தை அங்கு விடும்படி கடல் கடவுள் வேண்டினான். இராமனும் அங்ஙனமே செய்தான். இராமன் வழி வேண்டினான்.

வருணன் சேது கட்டச் சொன்னான். எங்கே?

***


‘கல்லென வலித்து நிற்பின்,
        கணக்கு இலா உயிர்கள் எல்லாம்
ஒல்லையின் உலந்து வீயும்;
        இட்டது ஒன்று ஒழுகா வண்ணம்
எல்லை இல் காலம் எல்லாம்
        ஏந்துவென்; இனிதின்! எந்தாய்!
செல்லுதி, “சேது” என்று ஒன்று
        இயற்றி, என் சிரத்தின் மேலாய.