பக்கம்:கம்பன் கவித் திரட்டு 4, 5, 6.pdf/296

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

286

அம்பால் சூலத்தை அறுத்துத் தள்ளினான். அங்கதன் அவ்வரக்கனைப் பிடித்தான்; இரு கூறாகப் பிளந்தான் அவைகளை எறிந்தான்.

மாலியன் வில்லை வாணரன் நீலன் ஒரு மலையினால் இரு துண்டாக்கினான். மாலி வாட்படையுடன் நெருங்கியபோது, குமுதன் அவன் தேரைச் சிதைத்தான். நீலன் எறிந்த மரத்தைப் பிளந்த மாலியின் தோளை வெட்டி வீழ்த்தி, அப்பால் சென்றான் லட்சுமணன். லட்சுமணன் யக்ஞசத்துருவையும் கொன்றான். வச்சிரதம்ஷ்டரனை அநுமன் குத்திக் கொன்றான். பிசாசன் என்ற அரக்கன் குதிரை மீது ஏறினான்.வானைரரை சுற்றிச் சுற்றி வந்து வருத்தினான்: இலட்சுமணன் வியாசாஸ்திரத்தினால் அவன் தலையை அறுத்தான்.

படைத் தலைவர்கள் மாண்ட செய்தியைச் சொல்ல, இலங்கேசனிடம் விரைந்தனர் ஒற்றர்.

படைத் தலைவர்கள் அழிந்ததைக் கேட்ட இராவணன் பெரிதும் வருந்தினான். அப்போதங்கே வந்தான் கரனின் புதல்வன் மகரக் கண்ணன்.

“என்னை அனுப்பினால் என் தந்தையைக் கொன்ற பகைவனை கொன்று தீர்ப்பேன்!” என்று உறுதிக் கூறினான். இராவணனும் இசைந்தான். அவனுடன் இருபது வெள்ளம் அரக்கர்ச் சேனை சென்றது. இரக்தாட்சசன் சிங்கன் என்ற தேர்ச்சக்கரக் காவலரும் சென்றனர். போர், போர்; மும்முரமான போர் இராமனிருக்குமிடத்தை நோக்கி தேர் சென்றது. “என் தந்தையைக் கொன்ற உன் உயிரை வாங்குவேன்!” என்று சபதம் செய்தான். பொருதான். மாயையினால் இருளை கவியச் செய்தான். தன் உருவந் தெரியாவண்ணம் நின்று பொருதான். இராமன் தனது அம்புகளை எய்தான். அவை மறைந்திருந்த மகரக் கண்ணனைத் தாக்கின. அவன் உடலிலிருந்த குருதி வழிந்த திசையை வைத்து, தன் கணையினால் அவனை வீழ்த்தினான். நீலன் மற்றவரை அழித்தான்.