பக்கம்:கம்பன் கவித் திரட்டு 4, 5, 6.pdf/317

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

307

பிரமித்தார்கள்: உலகெலாம் - எல்லா உலகங்களிலுமுள்ள உயிர் வர்க்கங்கள் யாவும்: அனுங்க - வருந்த, மெய்யின் ஐம்புலனும் - உடலிலுள்ள ஐந்து அறிவுகளையும்; அறிஞர்களும்- அடக்கிய முனிவர்களும்; அஞ்சினார்கள் - அச்ச முற்றார்; ( அவர்களுக்கு) தாம் செய்யும் வினை வேறு இலை -தாம் (இராவணனுக்கு எதிராகச்) செய்யும் தொழில் (அஞ்சுவதையன்றி) வேறு இல்லாமற் போயிற்று.

***

இராவணன் வருகையைக் கண்டன வானர சேனைகள். நடுங்கின; தரையில் வீழ்ந்து வாய் குழறின. பெரியதான ஒலி அதனைக் கேட்டான் இராமன்.

***


தொழும் கையொடு, வாய் குழறி,
        மெய்ம் முறை துளங்கி,
விழுந்து கவி சேனை இடுபூசல்
        மிக, விண்னோர்
அழுந்து படு பால் அமளி,
         ‘அஞ்சல்’ என, அந்நாள்,
எழுந்த படியே கடிது எழுந்தனன்,
         இராமன்.

கூப்பிய கையுடனே வாய் குழறி, வலி குன்றி வீழ்ந்தது வானரச் சேனை, அவ்வாறு வீழ்ந்தபோது அலறின. அந்த பேராரவாரம் மிகவே, இராமன் அவர்தம் துயர் தீர்க்க வேகமாக எழுத்தான். அது எப்படியிருந்தது? முன்னர், திருப்பாற்கடலில் திருமால், தேவர்கள் து ன் பு ற் று கதறியபோது, ‘அஞ்சேல்!’ என்று அபயம் அளித்து தசரத மன்னனின் மகனாகத் தோன்றுவதற்காக எழுந்ததுபோல் இருந்ததாம்.

***