பக்கம்:கம்பன் கவித் திரட்டு 4, 5, 6.pdf/321

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

311


(‘பெருந் திண் தேரை இராமன் மேல் விடுதி’ என்று இராவணன் தன் தேரோட்டிக்குக் கூறினான். அவ்வாறே அத்தேர் இராமனை நெருங்குகையில், தன் தேர்ப்பாகனான மாதலி இராவணனை எதிர்க்கத் துடிப்பதைக் கண்டான் இராமபிரான்.)


மாதலி வதனம் நோக்கி,மன்னர்
       தம் மன்னன் மைந்தன்,
‘காதலால் கருமம் ஒன்று
       கேட்டியால்; களித்த சிந்தை
ஏதலன் மிகுதி எல்லாம் இயற்றிய
       பின்றை, என் தன்
சோதனை நோக்கிச் செய்தி;
       துடிப்பு இலை’ என்னச் சொன்னான்.

தேரோட்டி மாதலியைப் பார்த்து சக்கர வர்த்தி திருமகன் இராமன் சொல்கிறான்; “நான் சொல்வதை அன்புடன் கேள்; இராவணனுடைய ஆர்ப்பாட்டமெல்லாம் அடங்கட்டும். இப்போது அவசரப்படாதே! பின் நான் சொல்கிறப்படி வேகமாக தேரை ஓட்டு!” என்றான்.

***

மாமறை அமலன் . பெரிய வேதங்களாற் கூறப்படும் அமலனான இராமன் (இராவணன் தன்னை நோக்கி வருவகைக் கண்டு); மாதவி வதனம் நோக்கி - மாதலியின் முகத்தைப் பார்த்து; மாரு காதலோய் - மாறுபாடற்ற அன்புடையோனே!; கருமம் ஒன்றும் - காரியம் ஒன்றினை; கேட்டி - (நான் சொல்லக்) கேட்பாயாக; களித்த சிந்தை ஏதலன் - (போர் வெறியினால்) களிப்பு மிக்க உள்ளத்தையுடைய பகைவனான இராவணன்; மிகுதி எல்லாம் இயற்றிய பின்றை - தீமைகள் யாவற்றையும் செய்து முடித்த பிறகு; என் தன் சோதனை நோக்கி, என்