பக்கம்:கம்பன் கவித் திரட்டு 4, 5, 6.pdf/334

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

324

மயக்கத்தை உண்டாக்கியது அது. இந்த மாய அத்திரத்தைக் கண்ட மாதலி இராமனிடம், “கரிய நீர் கொண்ட மேகம் போன்ற வண்ணனே! நீயே மாயவன். அங்ஙனம் இருக்க உன் மீதே மாயா அத்திரத்தை இராவணன் ஏவியது, இரும்பு, வேலை செய்யும் கம்மியனிடம், ஊசி செய்து விலைக் கூறும் மூடச் செயலைப் போன்றது!” என்றான்.

***

கருப்பு- வற்கடக் காலத்து பெய்ய வெழுந்த; கார் மழை வண்ண - கரிய (நீர் கொண்ட மேகத்தைப் போன்ற நிறத்தவனே! இரும்பு கம்மியற்கு - இரும்புப் பணி செய்கின்ற கருங் கொல்லனுக்கு; இழை நுழை - நூலிழை புகுகின்ற; ஊசி ஒன்று இயற்றி - ஊசி யொன்றைச் செய்து; விருப்பின் - விழைவோடு விலைக்கு கொடியால் - (இந்த ஊசியை) விலைக்குப் பெற்றுக்கொள்வாயாக! எனும் என்று கூறுகின்ற; பதடியின் அறிவிலி போன்று; அ - அந்த; கடுதிசை களிற்றின் - கடுமை வாய்ந்த திசை யானையின்; மருப்பு - தந்தத்தினால்; கல்லி - அகழப்பட்ட தோளவன் - தோள்களை உடையவனான இராவணன்; மீள் அரும் - திரும்புவதற்கு அருமையான; மாயம் - மாயாத்திரத்தை; விட்டான் - விடுத்தான்.

இராமன் அதுகண்டு அஞ்சவில்லை. மறத்தை அழிக்க அறமே சிறந்தது என, ஞானக் கணையை விடுத்தான்.

***

மாயா அத்திரம் அழிந்தது கண்ட இராவணன். சூலம் கொண்டு இராமன் மீது வீசினான். இராமனின் அம்புகளால் சூலப்படையை அழிக்க முடியவில்லை. தன்னை நோக்கி வேகமாக வந்த சூலத்தைப் பார்த்தான் தசரதன் மகன். பெரிதாக ஊங்காரம் செய்தான். அடுத்த நொடி சூலம் பொடிப் பொடியாக விழுந்தது.

***