பக்கம்:கம்பன் கவித் திரட்டு 4, 5, 6.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

77



ஆயவன் எழுத லோடும்
        அரும்பனை மரங்கள் தாமும்
வேய் உயர் குன்றும் வென்றி
        வேழமும் பிறவும் எல்லாம்
நாயகன் பணி ஈது என்ன
        நளிர்கடல் இலங்கை நாமும்
பாய்வன என்ன வானம்
        படர்ந்தன பழுவ மான.

***

அவ்வாறு அநுமன் வானத்தில் எழுந்தபோது என்ன நிகழ்ந்தது? பெருங்கிளைகளைக் கொண்ட மரங்கள், மூங்கில்கள் வளரப் பெற்ற குன்றுகள், யானைகள் இன்னோரன்ன பலவும் நிலை பெயர்ந்து, அநுமன் பின்னே தொடர்ந்து பறந்தன. எதனாலே? அநுமன் சென்ற வேகத்தினாலே. அது எது போலிருந்தது?

“இராம காரியமாக அநுமன் செல்கிறான். நமக்கும் அப் பணியிலே பங்குண்டு. ஆதலின் அநுமனைத் தொடர்ந்து நாமும் செல்வோம்” என்று அவை கருதுவன போல விளங்கினவாம்.

***

ஆயவன் - (அவ்வாறு) அநுமன்; எழுதலோடும் - வானத்தில் எழுந்த போது; அரும்பனை மரங்கள் தாமும் - அரிய பெரிய கிளைகளை உடைய மரங்களும்; வேய் உயர் குன்றும் - மூங்கில்கள் உயர்ந்து வளர்ந்துள்ள குன்றுகளும்; வென்றி வேழமும் - வெற்றிமிகு யானைகளும்; பிறவும் எல்லாம் - இன்னும் பலவும்; நாயகன் பணி ஈது என்ன - நாயகனாகிய இராமனுக்கு நாம் செய்யும் தொண்டு இதுவே என்று; தாமும் - அம்மரங்கள் முதலியனவும்; நளிர்கடல் -