பக்கம்:கம்பன் கவித் திரட்டு 4, 5, 6.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

79



மூன்றாவது இடையூறு அங்கார தாரகை என்ற ஓர் அரக்கி அவளையும் கொன்று பவழமலைக்குத் தாவினான் அநுமன்,

அங்கிருந்து இலங்கையைப் பார்க்கிறான் அநுமன்.

***


மண் அடி உற்று மீது
        வானுறு வரம்பின் தன்மை
எண் அடி அற்ற குன்றின்
        நிலைத்து நின்று, உற்று நோக்கி,
விண்ணிடை உலகம் எனும்
        மெல்லியல் மேனி நோக்க,
கண்ணடி வைத்தது அன்ன
        இலங்கையைத் தெரியக் கண்டான்.

தேவருலகத்தை ஓர் அழகிய பெண் என்று சொன்னால் அந்தப் பெண் தன் மேனியழகு காண வைத்திருக்கும் கண்ணாடி என்று சொல்லலாம் இலங்கையை,

அதாவது தேவலோகத்தின் பிரதிபிம்பமாக விளங்கிற்றாம் அந்த இலங்காபுரி. அதனைக் கண்டான் அநுமன். எங்கு நின்று? பவழமலையில் நின்று.

***

அடி மண் உற்று - அடிப்புறம் நிலத்தில் படிந்து; மீது - உச்சி; வான்உறும் - வானத்தைப் பொருந்தி நிற்கும்; வரம்பின்தன்மை - அளவின் எல்லையை; எண் அடி அற்ற - கணக்கிட முடியாத; குன்றின் -அந்தப் பவழ மலையின் மீது; நிலைத்து நின்று - உறுதியாக நின்று கொண்டு; உற்று நோக்கி - கூர்ந்து கவனித்து; விண்ணிடை உலகம் என்னும் மெல்லியல் - வானுலகம் என்னும் பெண்; மேனி நோக்க - தன் உடல் அழகைக் காண; கண்ணடி வைத்தது அன்ன .