பக்கம்:கம்பன் கவித் திரட்டு 4, 5, 6.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

87


தேவர் என்பவர் யாவரும் - தேவர் என்று சொல்லப்படுகிறவர் எல்லாரும்; இ திரு நகர்க்கு இறைவர்க்கு - இந்த அழகிய இலங்காதிபனாகிய இராவணனுக்கு; ஏவல் செய்பவரே - பணி செய்வோரே; செய்கிலாதவர் எவர் எனின் - அப்படி ஏவல்செய்யாதவர் எவர் என்று கேட்டால்; மூவர் தம்முளும் இருவர் - மும்மூர்த்திகளில் இருவர்; பிரம்மா, விஷ்ணு, சிவன் என்று சொல்லக்கூடிய மூவரில் இருவர் (சிவன், விஷ்ணு ஆகிய இருவரே) என்றால் - எனும் போது; இனி முயலில் - இனி முயற்சி செய்தால்; தா இல் மாதவம் அல்லது பிறிது ஒன்று தகுமோ - குற்றமற்ற தவமேயன்றி வேறு ஒன்று முயற்சி செய்யத்தகுமோ? (தகாது என்றபடி).

***


போர் இயன்றன தோற்ற என்று
        இகழ்தலில் புறம் போம்
நேர் இயன்றவன் திசைதொறும்
        நின்ற மா நிற்க
ஆரியன் தனித் தெய்வமாக்
        களிறும் ஓராழிச்
சூரியன் தனித் தேருமே
        இந்நகர்த் தொகாத

இராவணனுடன் போர் செய்து தோற்றுவிட்டன திக்கு யானைகள். அதனால் பயந்து ஓடிச் சென்று திசைக்கு ஒன்றாக நின்றுவிட்டன. ஐயனாருடைய யானை வாகனமும் சூரியனுடைய ஒற்றைச் சக்கரத் தேரும் தவிர மற்றைய யாவும் இலங்கையில் உள்ளனவே.

***

போர் இயன்றன - போர் செய்தனவாய்; தோற்ற - தோற்று ஓடின; என்று இகழ்தலில் என்று இகழப்பட்டமை-