பக்கம்:கம்பன் சுயசரிதம்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத்தொண்டைமான்

111

என்றாலும் அவனுடைய சந்திரோதய வர்ணனை ஒன்று மிகவும் சிறப்பாக இருக்கிறது.

ராமன், லக்ஷ்மணன், சீதை மூவரும் அயோத்தியை விட்டுக் காடு நோக்கிச் செல்கிறார்கள். மூவரும் காட்டிற்குள் நுழைந்து போகிறபோது, வழி மறிப்பதுபோல இருள் தொடர்கிறது. அவர்களோடு தோழமை பூண்ட இருள் அப்படித் தடுக்கும்போது, தேவர்கள் சும்மா இருப்பார்களா? அந்த இருளைத் துரத்த ஒரு கை விளக்கு எடுத்துக்கொண்டு வந்து விடுகிறார்கள். அப்படி வானவர்கள் ஏந்தி வந்த விளக்குப் போலவே சந்திரன் உதயமாகிறான் என்று பாடுகிறான்.

பொய் வினைக்கு உதவும் வாழ்க்கை
அரக்ணப் பொருந்தி, அன்னார்
செய்வினைக்கு உதவும் நட்பால்
செல்பவர் தடுப்ப தேய்க்கும்
மை விளக்கியதே அன்ன
வயங்கு இருள் துரத்த வானம்
கை விளக்கு எடுத்த தென்ன
வந்தது கடவுள் திங்கள்

என்பது கம்பன் வர்ணனை. இது வெறும் வர்ணனையாக மட்டும் இருக்கவில்லை. ராமாவதார ரகஸ்யத்தையே வெளிப்படுத்தும் வகையில் அல்லவா வர்ணனை வடிவெடுக்கிறது. புரந்தரனார் செய்த பெருந்தவந்தானே பரந்தாமனை ராமனாக அவதாரம் செய்யும்படி செய்திருக்கிறது. அந்த உண்மையையே மனித உள்ளத்தோடு விளக்கும் வகையில் வர்ணிக்கிறான் கம்பன்.

இன்னும் பெண்ணின் பெருமையை எப்படி எப்படி எல்லாமோ வர்ணனை செய்து இருக்கிறார்கள் கவிஞர்கள். மலையிடைப் பிறவா மணி, அலையிடப் பிறவா அமுது என்றெல்லாம் சிலப்பதிகார காப்பிய நாயகியை இளங்கோ