பக்கம்:கம்பன் சுயசரிதம்.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

112

கம்பன் சுயசரிதம்

வர்ணிக்கிறார். ஆனால் கவிச்சக்கரவர்த்தி சிறையிலிருந்த செல்வியாம் சீதை வர்ணனை விண்நோக்கி உயருகிறது. அசோகவனத்தில் சிறை இருந்த சீதையைச் சென்று காண்கிறான் அனுமன். அவள் காதலுக்கு இரங்கி நிற்பதையும் பார்க்கிறான். அவனைத் துரும்பென மதித்து சீதை பேசும் பேச்சையும் கேட்கிறான். அத்தனையும் பார்த்துவிட்டு கிஷ்கிந்தைக்குத் திரும்பி, ராமனிடம் அச்சிறை இருந்தாளின் ஏற்றத்தைக் கூறுகிறான். எத்தனை எத்தனை விதமாகவோ சோகத்தில் மூழ்கி இருக்கும் நங்கையாய் சீதையின் கற்பொழுக்கத்தால் தேவ மகளிர் எல்லாம் உயரிய நிலையை அடைந்து விடுகிறார்கள். இதுவரை சிவபிரானின் திருமேனியில் இடது பக்கத்தில் மாத்திரம் இடம்பிடித்திருந்த பார்வதியே சிவபெருமானது தலைமேலேயே ஏறி உட்கார்ந்து கொள்கிறாள். தாமரை மலரில் இருந்த லக்ஷ்மி தேவியும் திருமார்பின் மார்பில் இருந்தவள் இப்போது திருமாலின் ஆயிரக்கணக்கான முடிகளுக்கும் மேலாக ஒரே வியாபகமாக வீற்றிருக்கிறாள். அவ்வளவு உயர்வு வந்துவிட்டது பெண்மைக்கு என்று முழங்குகிறான்.

சோகத்தால் ஆயநங்கை
கற்பினால் தொழுதற்கொத்த
மாகத்தார் தேவிமாரும்
வான்சிறப்பு உற்றார், மற்றைப்
பாகத்தாள் இப்போது ஈசன்
மகுடத்தாள் பதுமத்தாளும்
ஆகத்தாள் அல்லள், மாயன்
ஆயிரம் மெளலி மேலாள்

என்பது கம்பனது வருணனை. ஆம் பெண்ணின் பெருந்தக்க யாவுள என்னும்படியாக அல்லவா அமைந்திருக்கிறது இந்தக் கற்பனையும் வருணனையும்.

❖❖❖