பக்கம்:கம்பன் சுயசரிதம்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



7. மலைக்குலமயில்

காவியம் ஆனாலும் சரி, நாடகமானாலும் சரி, சிறுகதை என்றாலும் பெரிய நாவல் என்றாலும் அவையெல்லாம் பல பல பாத்திரங்களைக் கொண்டே நடைபெற வேண்டியிருக்கும். கதையை உருவாக்கும் முக்கிய பாத்திரங்களை காவிய நாயகன் காவிய நாயகி என்பர். இவர்களை சுற்றிப் பலபல சம்பவங்களைச் சித்தரிக்க உதவுபவர்களே சிறிய பாத்திரங்கள். சாதாரணமாகக் கதையோ காப்பியமோ எழுதுபவர்கள் தங்கள் திறமையை எல்லாம் காவிய நாயகன் அல்லது காவிய நாயகியை உருவாக்குவதிலேதான் காட்டுவர். மற்ற பாத்திரங்களை ஏதோ அவசரக் கோலம் அள்ளித் தெளி என்பது போல கொஞ்சம் முன்னும் பின்னுமாகத்தான் உருவாக்கியிருப்பர். ஆனால் கவிச் சக்கரவர்த்தி கம்பன் போன்ற மகாகவிகளோ பிரதான பாத்திரங்களை உருவாக்குவதற்கு எத்தனை அக்கறை காட்டுகிறார்களோ அத்தனை அக்கறையையும் உப பாத்திரங்கள் உருவாக்குவதிலும் காட்டுவர். அப்படி உருவாக்கப்பட்ட ஓர் அரிய பாத்திரம்தான் இராம கதையில் கிஷ்கிந்தை மன்னனான வாலியின் மனைவியாக உருவாக்கப்பட்டிருக்கும் தாரை.

தாரை என்று ஒரு பாத்திரப் படைப்பு இல்லாமலேயே காப்பியம் உருவாகியிருக்கக் கூடும். கதையின்