பக்கம்:கம்பன் சுயசரிதம்.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத்தொண்டைமான்

145


கம்பன் காவியம் பாடியது யாருக்காக என்றால், முதலில் தன் ஆத்ம திருப்திக்காக. தன் ஆத்ம அனுபவங்களை வெளியிடுவதற்காக. நல்ல கதை என்பதற்காக, உத்தமமோத்தமனான ராமனை உருவாக்கிக் காட்டலாம் என்பதற்காக, தெய்வமாக்கவி வள்ளுவன் வையத்தில் வாழ்வாங்கு வாழ வகுத்த வழிகளை நல்ல கவிதை உருவத்தில், கதை மூலமாகச் சொல்லலாம் என்பதற்காக, எல்லாவற்றிற்கும் மேலாக கவிதையை அனுபவிக்கும் வள்ளல் சடையப்பர் கேட்டு இன்புறுதற்காக, இந்த உண்மையைத் தெரிந்திருந்தார் திருநெல்வேலியில் ஒரு அன்பர். டிகேசி அவர்களின் பள்ளித்தோழர். திரு. பி. ஆவுடையப்ப பிள்ளையவர்கள். அவர் தமிழ்க் கவிஞர் அன்று, என்றாலும் அவருக்குப் பாட வந்தது. பாட்டு இதுதான்

கம்பனும் வெண்ணெய் நல்லூர்
     வள்ளலும் கலந்து பேசி
இம்பரில் பிறப்போ மாயின்
     இருகுணம் ஒருங்கு சேர
உம்பரின் தேவ தேவை
     ஒருவரம் கசிந்து கேட்க
செம்பது மத்தோன் செய்தான்
     சிதம்பர நாத மாலை.

உண்மைதான். வள்ளன்மையும், கவிதா ரஸம் அறியும் ஆற்றலும் நிறைந்திருந்த ரசிகமணியவர்களைக் கம்பனும் சடையப்பரும் சேர்ந்தமைந்த ஓருரு என்று கொள்வதில் வியப்பில்லைதானே.

ஆனால் நான் மேலும் ஒன்று சொல்வேன். அசோகவனத்தில் சிறை இருக்கிறாள் சீதை. அவளைத் தேடித் தென்திசை வந்த வானர வீரர்களில் அனுமன் கடல் கடந்து வந்து, இலங்கையில் அசோகவனத்தில் காண்கின்றான். அனுமனை அனுப்பும்போது, சீதையைக் கண்டு வருவான்