பக்கம்:கம்பன் சுயசரிதம்.pdf/151

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத்தொண்டைமான்

149

முடித்துக் காட்டுவதற்கு என்றெல்லாம் எண்ணுகிறோம். அதிசயிக்கிறோம். முக்கின் மேலேயே விரலை வைக்கிறோம்.

ஆங்கிலப் பேராசிரியர் ஒருவரிடம் காவியம் (Epic) என்றால் என்ன என்று ஒருவர் கேட்டார். காவியம் என்றால் ஹோமர் எழுதிய இலியட் என்னும் காவியத்தைப் போல எழுதப்பட்டதெல்லாம் காவியமே என்று லேசாகப் பதில் சொல்லிவிட்டார் அவர். (Epic in a poem written in imitation of Homer's Iliad) வேறு என்ன சொல்ல? இதே போலத்தான் நம்மவர்களுக்கு நம் காவியத்தை விளக்க வேண்டிருக்கிறது. கம்பனது இராமாயணம் போல் எழுதப்பட்ட ஒரு காவியமே காவியம், என்று சொல்வதைத் தவிர, காவியத்திற்கு வேறு இலக்கணம் கூற இயலவில்லை.

காவியத்திலே ஒரு வீர புருஷனுடைய கதை சொல்லப்படும். அவன்தன் வாழ்வும் தாழ்வும் விரிவாகவே விளக்கப்படும். மனிதனாகப் பிறந்தவன் எப்படி வீரனாக வளர்ந்தான். எப்படி லக்ஷ்ய புருஷனாக தெய்வீக சௌந்தர்யம் உடையவனாக வாழ்ந்தான் என்பதெல்லாம் தான் கூறப்படும். பின்னும் தேவரும் தொழும் தேவனாக அவன் எப்படி உருவானான் என்றெல்லாம் நம்மால் காவியத்திலிருந்துதான் அறிய சாத்தியப்படும். சாதாரணக் கதையிலிருந்தல்ல. காவியகதிக்கும் கதைப் போக்கிற்கும் ஒரே ஒரு வித்தியாசம்தான். கதாசிரியன் நடக்கிற இடத்திலே காவிய கர்த்தா பறப்பான். அவன் குளறுகிற இடத்திலே இவன் தெய்வமாக் கவிதை செய்வான். அவன் கதை சொல்லுவான். இவன் காவியம் இயற்றுவான். அவ்வளவுதான். Where narrative walks epic flies Narrate stammers while epic talks with tongue of men and angels.

இராமகதையை உலகுக்குத் தந்தருளிய பெரியார் வான்மீக முனிவர். இராமகதை மக்கள் வாழ்வைப் பண்படுத்த