பக்கம்:கம்பன் சுயசரிதம்.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத்தொண்டைமான்

177

கற்பனையாம் தேரேறி
     ககன மதிற் பறந்து
அற்புதமாம் கவி உலகில்
     அமுதொழுகும் இசை பரப்பி
நீல நெடு வான் முகட்டை
     நித்தம் தழுவி வரும்
நீலக்கடல் அலையில்
     நின்று கவி சொல்லி
பொங்கும் திரைகளிலே
     போதம் விளைவித்து
எங்கும் அவன் ஒளியை

     எல்லோர்க்கும் காட்டிடுவான்.


இதன் பின்னர்,

அன்பென்னும் புணையேறி
     அறிவென்னும் தண்டோடு
கம்பனெனும் கடலினிலே
     கரைகாணப் புறப்பட்டேன்.
அப்பப்ப! அக்கடலில்
     அன்றடித்த சுழற்காற்றில்
செப்பரிய மழையோடு
     சேர்ந்த பெரும் புயலில்
சிக்கிச் சிதறுண்டு
     செல்கதியை அறியாது
துக்கித்து தயருழந்தும்

     துணிவை விடவில்லை.


ஆதலினால்,

மழைநின்று புயல் ஓய்ந்து
     மகிழ்வெய்தும் காலையிலே
தழைக்கின்ற அறிவொளியைத்

     தந்தான் கவியரசன்.