பக்கம்:கம்பன் சுயசரிதம்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத்தொண்டைமான்

97


துறுகொண்டது பாதி – அதனால்
கொட்டாங்கச்சியிலே நெல்லு
கொடுங்கையிலே வைக்கோல்.

இந்தப் பாட்டைப் படித்துவிட்டால் ஊர் நிலைமை தெரிந்துவிடும். எங்கு பார்த்தாலும் ஒரே குட்டிச்சுவர்தான். கல்யாண ரங்கநாதர் கோயில் எங்கிருக்கிறது என்றால், ஒரு கள்ளிக்கோட்டை ஓடு போட்ட ஒரு கொட்டகையைக் காட்டுவார்கள். அர்ச்சகருக்காகக் காத்திருந்து சாவி பெற்று கதவைத் திறந்து கோயிலுக்குள் நுழைந்தால் அங்கு ஒரு கோதண்டராமன் எதிரே நிற்பான். பக்கலிலே லக்ஷ்மணனும் சீதையும் நிற்பார்கள். நான் பார்த்த ராமன் சிலைகளுக்குள்ளே சிறந்தது இதுதான். அதனால்தான் அந்த ராமனையே அட்டைப் படமாகப் பார்க்கிறீர்கள். “அந்தமில் அழகன்”, “அல்லையாண்டமைந்த மேனி அழகன்”, “ஆடவர் பெண்மையை அவாவும் தோளினான்” என்றெல்லாம் பாடுகிறானே கம்பன் அதெல்லாம் இந்த அழகனைக் கண்டபின் தானோ என்னவோ. ராமனை உருவாக்கும் சிற்பிகள் அவன் கையில் கோதண்டத்தையும் அம்பையும் வைக்கமாட்டார்கள். வைக்க மறந்து போய்விடுகிறார்கள் என்றில்லை; வில்லை ஏந்திய கையைக் காட்டிவிட்டு பார்ப்பவர்கள் வில்லைக் கற்பனைப் பண்ணிக் கொள்ளட்டுமே என்று விட்டுவிடுவார்கள் அவ்வளவுதான். ஆனால் இன்றைய ரஸிகர்கள் இருக்கிறார்களே அவர்கள் அந்த வில்லேந்திய கரத்தில் வில் வைக்கத் தவறுவதில்லை. வில்லை எவ்வளவு கேவலமாக வைப்பார்கள் என்பதை முடிகொண்டான் ராமன் கையில் வைத்திருக்கும், அதாவது இவர்கள் திணித்திருக்கும் வில்லும் அம்புமே சான்று பகரும். தில்லைவிளாகத்தில் வில் பரவாயில்லை என்றாலும் அம்பை இப்படி போலீஸ்காரனைப் போல் ராமன் தூக்கிப் பிடித்துக் கொண்டிருக்க வேண்டாம் என்று சொல்லத்தோன்றும். அடம்பர் ராமரின் கையில் உள்ள அம்பு உரிய அளவுக்கு அதிகமே என்றாலும் அவர் கையில்