பக்கம்:கம்பராமாயணம் (உரைநடை).pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாலகாண்டம்

53



விசுவா மித்திரர். “தாடகை அழிவு பெற்றாள்; அகலிகை வாழ்வு பெற்றாள்; அவன் கைவண்ணம் அங்குப் புலப் பட்டது. கால்வண்ணம் இங்கே தெரிய வந்தது'என்று விசுவாமித்திரர் பாராட்டினார். “கைவண்ணம் அங்குக் கண்டேன்; கால்வண்ணம் இங்குக் கண்டேன்” என்பது அவர் சொல்.

மிதிலையில் சானகி

கருகிய மொட்டு ஆகாமல் ஒரு பெண்ணுக்கு வாழ்வளித்த இராமன், மற்றோர் பெண்ணை வாழ்க்கைத் துணைவியாக ஏற்கும் சூழ்நிலை அவனை எதிர்நோக்கி நின்றது. காடும் மேடும் கடந்தவர் நகரச் சூழலை அடைந்தனர்; மிதிலையின் மதிலையும், அகழியையும், சோலைகளையும் கடந்து நகருக்குள் புகுந்தனர்; அந்நகரத்துப் பெருவீதிகளையும், கடை வீதிகளையும், அரச வீதிகளையும் கடந்து கன்னி மாடம் இருந்த தெரு வழியே நடந்து சென்றனர். அந்தத் தெருவில் கன்னி மாடத்து மாளிகையில் எழில்மிக்க நங்கை ஒருத்தி நின்று கொண்டு, அம் மாளிகையின் கீழே முற்றத்தில் அன்னமும் அதன் துணைப் பெடையும் அன்புடன் களித்து ஆடும் அழகைக் கண்ட வண்ணம் இருந்தாள்.

முனிவர் பின் சென்ற இராமன், மாடத்துப் புறாவைக் கண்டு வியந்தாள். பொன்னை ஒத்து ஒளி பொருந்திய மேனியும், மலர்க் கூந்தலும், கண்ணைக் கவரும் அழகும் அவனைக் கவர்ந்தன. அக் கோதையாள் சனகன் மகள் சீதை என்பது அவனுக்குத் தெரியாது. அவளுக்கும் அவ் விளைஞன் யார்? என்பதும் தெரியாது; “அண்ணலும்