பக்கம்:கம்பர், வ. சுப. மாணிக்கம்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26

கம்பர்


கம்பர் .*. - நிலப்பகம் என்னும் முதலிலம்பகம் சச்சந்தன் விசயையை மணந்து இன்றது அன்ப வீழ்ச்சியால் ஆட்சியை அமைச்சன் கையில் துப்பித்துப் பட்ட அவலநிலைகளை விரித்துப் புனைவதைப் பார்க்கும் பொது. அதுவே ஒரு காப்பியமாக மிளிர்கின்றது. அது மட்டுமன்று; பல்வேறு சுவைகளையும் அவ்வொரு இலம்பகத்திலே அற்குமளவுக்க அவ்விலம்பகம் தன்னிறைவு உடையதாகவும் விளங்குகின்றது. 26 ww உ8 மிபேசுவைக் காப்பியம் மணிமேகலையின் பிறப்பு முதலாக வாழ்மைப் பேசவில்லை. அவள்தன் நுறவுச் சூழ்நிலையில் தொடங்குகின்ற பிற காப்பியங்கள் துறவாகக் கொண்டு போய் போலாது, துறவாகத் தொடங்குதலின், க்ை காப்பியம் 'மணிமேகலை துறவு' எனப் பெயர் பெறுகின்றது. மாவண் தமிழ்த்திறம் மணிமேகலை துறவு என்பது சிலப்பதிகாரம் கண்ணகி கோவலன் திருமணத் தொடக்கிறாக மங்கல வாழ்த்துப் பாடலாக எழுகின்றது. பெரிய புராணக் காப்பியம் தனிப்போக்கு உடையது. பல தனித் தன்லவர்களின் அரிய வாழ்வைப் புனைந்து காட்டுவது. யார் பிறப்பை, யார் வாழ்வை முன் கூறுவது? திருத்தொண்டத் தொகை யருளிய சுந்தரரின் நாட்டையும் ஊரையும் பிறப்பையுமே முன்சுட்டிக் காப்பியம் நடத்துகின்றார் சேக்கிழார். இவ்வாறு தமிழ்க் காப்பியங்களிடை தொடக்க வேறுபாடுகள் இருத்தலின் இப்படித்தான் தொடங்க வேண்டுமென்று நேர்கோடிட்டாற்போல ஒரு வரம்பு விதிக்க முடியுமா? பெரும் புலவன் செய்யும் படைப்புக்கு அவன் கொள்வுதே விதி. வல்லான் வகுத்ததே வாய்க்கால். தன் கருத்துக்கும் கற்பனைக்கும் கதைக்கும் எதனைத் தொடங்கினால், எதனை வளர்த்தால், எதனைக் கற்பித்தால் சிறக்கும் என்று காணும் உரிமையைப் புலவனுக்கு விட்டு விட வேண்டும். முழுப்பார்வை இராமாயணக் காப்பியத்துக்குப் பாலகாண்டம் தேயைான பகுதியா, என்று நல்லாசிரியர் சிலர் ஐயப்படுகின்றனர். இவ்வையம் மேனாட்டுக் காப்பிய முறையொடு ஒத்துப்பார்ப்பதால் தோன்றுகின்றது.இராவணன் வதையே இராமாயணத்தின் கருத்து எனவும், இக்கருத்து நிறைவேறுவதற்க இராமன் சீதையோடு காடு செல்வதே விதை எனவும், நாடு துறத்தலைக் கூறும் அயோத்தியா காண்டமே உண்மைக் கதை துவங்கும் காண்டம் எனவும், காப்பியத்தோடு பாலகாண்டத்துக்கு அவயவ சம்பந்தம் இல்லை எனவும் வ.வெ.சு. அய்யர் விளக்குவர். இராமன் பிறப்பையும்