பக்கம்:கம்ப நாடன் காவியத்தில் காதலும் பெருங்காதலும்.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ.சீனிவாசன் 93 அதை அறிந்த அன்னை அன்னவன் சீற்றம் மாற்றி, விதிமுறை மறந்தான் அல்லன் பெரும் சேனை வெள்ளம் வந்து சேரும்படி துது அனுப்பியுள்ளான். படைகள் வரக் காத்திருக்கிறான் என்று விவரம் கூறி இலக்குவனைச் சமாதானப் படுத்தியுள்ளாள். சுக்கிரீவன், கலக்கமடைந்து ஏன் என்னிடம் முன் கூட்டிக் கூறவில்லை என்றான். “நான் உன்னிடம் வந்தேன் நீ மயக்கத்தில் இருந்தாய். நான் கூறியதை நீ உணரவில்லை அதன் பின்னர் நான் அனுமனைத் தேடிச் சென்று இருவரும் சேர்ந்து அன்னையிடம் போய்க் கூறி இலக்குவனை சமாதானம் செய்யச் செய்தோம். நீ உடனே சென்று இலக்குவனைக் காண வேண்டும்’ என்று சுக்கிரீவனிடம் அங்கதன் எடுத்துக் கூறினான். இதைக் கேட்ட சுக்கிரீவன் மிக்க வருத்தமடைந்தான். தான் மது, மாதுவில் மூழ்கிக்கிடந்து தனது கடமைகளைத் தவறி விட்டதாக வருந்துகிறான். அவர்களால் பெற்றுள்ள பேருதவியை நான் மறக்கலாமா? நறவு உண்ட மயக்கத்தில் இருந்து விட்டேன்’ என்று தனது தவறை உணர்ந்து கூறுகிறான். 'ஏயின நறவு அலால் மற்று ஏழைமைப் பாலது என்னோ? தாய் இவள், மனைவி, என்னும் தெளிவின்றேல் தருமம் என்னாம் தீவினை ஐந்தின் ஒன்றாம்; அன்றியும் திருக்கு நீங்கா மாயையின் மயங்குகின்றாம்; மயக்கின் மேல் மயக்கும் வைத்தாம்” என்று தன்னை நொந்து கொள்கிறான். இங்கு சுக்கிரீவன் தீவினைகள் ஐந்தையும் பற்றியும் அவைகளைால் ஏற்படும் தீமைகள் பாதகங்கள் பற்றியும் தான் செய்த தவறுகள் பற்றியும் எடுத்துக் கூறிவருந்துவதைக் கம்பர் மிகவும் சிறப்பாக எடுத்துக் கூறுகிறார். தீவினைகள் ஐந்து என்பது வட மொழியில் பஞ்சமா பாதகங்கள் என்று கூறப்படுகின்றன. காதல், கவறாடல் (சூது) கள்ளுண்ணல், பொய் மொழிதல், ஈதல் மறுத்தல் என்ற ஐந்து தீவினைகளைத் தமிழில் அற நூல்கள் குறிப்பிடுகின்றன. இவைகளில் கொலையும் களவும் கூட சேர்க்கப்படுகின்றன. இங்கு கள் குடித்தலின் தீமைகளைப் பற்றியும் கள்ளைக் குடித்து மயக்கம் ஏற்பட்டு விட்டால் இவள் தாய், இவள் மனைவி என்னும் அறிவு கூட இல்லாமல் போகிறது, என்பது பற்றியும் சுட்டிக் காட்டப் படுகிறது. அறிவு கெடும் போது பக்கக் கேடுகள் ஏற்படுகின்றன.