பக்கம்:கம்ப நாடன் காவியத்தில் காதலும் பெருங்காதலும்.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ.சீனிவாசன் 155 அரசப்பட்டம் சூட்டப்பட்டு விட்டது. வில்வீரர்களும் வந்து சேர்ந்து விட்டனர். சீதையைச் சிறையில் வைத்து வஞ்சகம் நிறைந்த அரக்கனை அவனுடைய சுற்றத்தோடு நரகம் என்னும் மீள்விலாச் சிறையில் வைப்பர்’ என்று தங்கள் அரசனிடம் கூறும்படி ஒற்றர்களைத் திருப்பி அனுப்புகிறார் இராமபிரான். இங்கு ஒரு ஒற்றர் நிகழ்ச்சியாக மட்டுமல்லாமல் சீதையைத் தனித்து ஒரு சிறையில் வைத்த இராவணனுக்கு, அவன் செய்த குற்றத்திற்குத் தண்டனையாக வயங்கு எரி நரகம் என்னும் மீள்விலாச் சிறையில் வைப்பேன்’ என்று இராமன் கூறுவது கவனிக்கத் தக்கதாகும். இராமனுடைய உள்ளத்தில் சீதையின் பாலான காதல் உணர்வு எப்போதும் மேலோங்கியிருந்தது. “அணை நெடும் கடலில் தோன்ற, ஆறிய சீற்றத்து ஐயன் பிணைநெடும் கண்ணி என்னும் இன்னுயிர் பிரிந்த பின்னைத் துணைபிரிந்து அயரும் அன்றில் சேவலின் துளங்குகின்றான்; இணை நெடும் கமலக் கண்ணால் இலங்கையை எய்தக் கண்டான்' என்றும் கம்பர் குறிப்பிடுகிறார். 'அருந்ததி அனைய நங்கை அவ்வழி இருந்தாள் என்று பொருந்திய காதல் துண்டப் பொன்னகர் காண்பான் போலப் பெருந்துணை வீரர் சுற்றத் தம்பியும் பின்பு செல்ல, இருந்த மான் மலையின் உச்சி ஏறினன்; இராமன்; இப்பால்’’ என்று இராமனுடைய காதலுணர்வினைக் கம்பன் குறிப்பிடுகிறார்.