பக்கம்:கம்ப நாடன் காவியத்தில் காதலும் பெருங்காதலும்.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பநாடன் காவியத்தில் 156 > تدخلإصلا காதலும் பெருங்காதலும் 22. மாலியவான் அறிவுரை மாலியவான் இலங்கைப் பிரமுகர்களில் முக்கியமானவன். இராவணனுக்குத் தாய் வழிப் பாட்டன். மிகுந்த புத்திமான். அனுபவம் மிக்கவன். இராவணனுடைய மிகவும் நெருக்கமான உறவினர் வட்டத்தில் உள்ளவன். இராவணன், “மனிதர்கள் அருகில் வந்து விட்டார்கள். இனி என்ன செய்யலாம்’ என்று தனக்கு மிக நெருக்கமானவர்களை அழைத்து ஆலோசனை கேட்டான். அப்போது முதியவன் மாலியவான் நமது தொன்மையான நகரம் சுட்டெரிக்கப் பட்டதைக் கண்டோம். கடலின் மீது அணைகட்டி முடித்து விட்டதையும் கண்டோம். இப்போது அம்மனிதர்களும் வானரர்களும் நமது கண்ணெதிரே வந்து விட்டதைக் காண்கிறோம். இதையெல்லாம் நாம் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறோம். இதைத் தடுக்க நம்மால் என்ன செய்ய முடிந்தது? ஒன்றும் செய்ய முடியவில்லை. “சுட்டாவா கண்டும் தொல் நகர், வேலையைத் தட்டவா கண்டும், தாவற்ற தெவ்வரைக் கட்டவா கண்டும், கண் எதிரே வந்து விட்டவா கண்டும் மேல் எண்ண வேண்டுமோ?” இதற்கு மேலும் நாம் நினைப்பதற்குச் சிந்திப்பதற்கு என்ன இருக்கிறது என்று கூறினார். இராவணன் கோபமாக 'உனக்கு பயமாக இருந்தால் வீடணன் உள்ள இடத்திற்கு ஒடிவிடு” எனக் கத்தினான். மாலியவான் மெளனமாகி விட்டான். சேனைத் தலைவர்கள், அனுமதி கொடுங்கள் வானரப்படையை அழித்து விட்டு வருகிறோம் என்று அனுமதி கேட்டார்கள். அப்போது மீண்டும் மாலியவான் எழுந்து பேசினான். இராமன் திருமாலின் அவதாரம். இலக்குவன் ஆதிசேடன் அம்சம். தேவர்களே வானரர்களாக வந்துள்ளார்கள். இலக்குமியே சீதா தேவி. இலங்கையைக் காத்து வந்த காவல் தெய்வம் இலங்கை மாதேவி காவலை விட்டுவிட்டுப் போய்விட்டாள். உன் தம்பி எவ்வளவோ சொல்லியும் நீ கேட்கவில்லை. உன் மீதுள்ள அன்பினால் என் உள்ளத்தில் எழுந்த வேதனை மிகுதியால் கூறுகிறேன். சீதையை விட்டுவிடு, உன் தீமைகள் எல்லாம் தீரும், என்று கூறினான்.