பக்கம்:கம்ப நாடன் காவியத்தில் காதலும் பெருங்காதலும்.pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ.சீனிவாசன் 167 என்னும் அற்புதமான கருத்துக்கள் நிறைந்த கவிதைகளில் இராவணன் தனது இருக்கை திரும்பியதைக் கம்பன் மிக அழகாகக் குறிப்பிடுகிறார்.

இராவணன் அஷ்டதிக்கு யானைகளையும் எதிர்த்துப் போராடிய வலுவான மார்பு கொண்டவன், கைலை மலையையேத் தனது தோள்களில் தாங்கிய தோள்வலி கொண்டவன், இராவணன் இசையில் வல்லவன், அதில் நாரதனுக்கே ஈடான நாவன்மை கொண்டவன், அழகிய முடிகள் பத்தும் கொண்டவன், சங்கரன் கொடுத்த தெய்வீக வாள் அவன் கையில் இருக்கிறது. அந்த வாளைக் கொண்டு தான், அவன் சீதையைக் தூக்கிக் கொண்டு வந்த போது தன்னை எதிர்த்த சாடாயுவின் வலுவான சிறகுகளை வெட்டி வீழ்த்தினான்.

இராவணன் தனது மார்பின் வலிமை, தோளின் வலிமை, நாவின் வன்மை, மணி முடிகள், வாள் வலிமை, வீரம் இவைகளை யெல்லாம் போர்க்களத்தில் இழந்து விட்டு வெறுங்கையோடு இலங்கை புகுந்தான் என்னும் ஆழ்ந்த கருத்துக்கள் நிறைந்த இப்பாடல் தமிழுலகில் பிரசித்தி பெற்றதாகும்.

முதல் நாள் போருடன் இராவணனுடைய வீரம் அழிந்து போயிற்று ஆயினும் போர் தொடர்கிறது.

எட்டுத்திசைகளிலும் உள்ள அரக்கர் படைகளை யெல்லாம் அழைக்கும்படி ஆணையிட்டு விட்டு இராவணன் தனது படுக்கையில் போய் படுத்தான். உரக்கம் கொள்ளவில்லை. சீதையைப் பற்றிய நினைவிருந்த நெஞ்சில் நாணம் நிறை கொண்டது. கவலை சுற்றியது. அவன் மானத்தை இழந்த நிலையில் இருந்தான் என்பதை,

“பண்நிறைந்த பவளச் செவ்வாய்ப் பைந்தொடிச் சீதை என்னும் பெண் இறைகொண்ட நெஞ்சில், நாண் நிறைகொண்ட பின்னர் கண் இறை கோடல் செய்யான்; கையறு கவலை சுற்ற உள் நிறை மானந்தன்மை உமிழ்ந்து எரி உயிர்ப்பது ஆனான்' என்று கம்பர் குறிப்பிடுகிறார்.

படுக்கையில் கிடந்த இராவணன் அவமானத்தால் பொங்கினான். நாணம் நிறைந்து கிடந்தான். இந்த நாணம் ஏன் அவனிடம் நிறைந்தது?

“வான் நகும், மண்ணும் எல்லாம் நகும், மணிவயிரத் தோளான் நான் நகு பகைஞர் எல்லாம் நகுவர் என்று நாணான்