பக்கம்:கம்ப நாடன் காவியத்தில் காதலும் பெருங்காதலும்.pdf/226

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ.சீனிவாசன் 183 விட்டாயே' என்று தானமாலை புலம்புவதைக் கம்பன் மிகுந்த அவலச் சுவையுடன் எடுத்துக் காட்டியுள்ளார். இங்கு தானமாலையின் புலம்பல் ஒப்பாரிப் பாடல் வடிவத்தைக் கொண்ட அவலச் சுவை நிறைந்த சிறந்த இலக்கியத் தன்மையுள்ள பாடல்களாக அமைந்துள்ளதைக் காண்கிறோம். கன்று இறந்து விட்டால் தாய்ப் பசு பதை பதைத்து கதறுவதைப் போல தனமாலை தனது இறந்து பட்ட மகனை நினைந்து இப்படிப் பல பலவும் பன்னி எடுத்தழைத்துக் கதறினாள். இவ்வரிகள் இராவணனுடைய காம வெறியின் விளைவுகளையும் சுட்டிக் காட்டுவதாகவும் அமைந்துள்ளது. حیت صلى الله عليه وسلم گاه دا تگیٹ لیتی؟ 29. நான் முகன் படை இந்திரசித்தன் நடத்திய போர் மிகவும் வலியாதாக இருந்தது. முதல் நாள் போரில் இந்திர சித்தன் மறைந்து நின்று நாகாஸ்திரத்தைத் தொடுத்து இலக்குவனையும் இதர வாணர வீரர் பலரையும் வீழ்த்திவிட்டான். கலுழன் உதவியால் இலக்குவனும் இதர வீரர்களும் உணர்வு பெற்று மீண்டும் எழுந்தனர். இரண்டாம் தடவையாக இந்திரசித்தன் போருக்கு எழுந்தான். மாயப் போர் புரிந்தான் வானரப்படைகளுக்கு பெரும் சேதங்கள் ஏற்பட்டன. இவனைப் பிழைக்க விட்டால் நமது படைகளுக்கு மேலும் பல அழிவுகளும் சேதங்களும் ஏற்படும் எனவே இவன் மீது அயன் படை தொடுப்பேன். அனுமதி வேண்டுகிறேன்.’’ என்று இலக்குவன் இராமனிடம் அனுமதி கேட்டான். அப்போது இராமன் அந்தணன் படைக்கலம் தொடுக்கின் அது ஒருவனைக் கொல்வதுடன் நிற்காது இவ்வுலகம் மூன்றையும் சுடும். எனவே நாம் அப்பிரம்மாஸ்திரத்தைத் தவிர்ப்பது நல்லது' என்று கூறினான். இலக்குவனும் அக்கருத்தை ஏற்று அவ்வயன் படை தொடுப்பதைத் தவிர்த்தான்.