பக்கம்:கம்ப நாடன் காவியத்தில் காதலும் பெருங்காதலும்.pdf/245

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பநாடன் காவியத்தில் 204 --==== காதலும் பெருங்காதலும் இராமன் போர்க் கோலம் பூண்டு வில்லினைத் தொழுது வாங்கி ஏற்றினான். மூல பலப்படை அழிந்தது. அனைவரும் இராமனை வாழ்த்தி வணங்கினர். “தாய் படைத்துடைய செல்வம் ஈகெனத் தம்பிக்கு ஈந்து வேய்படைத்துடைய கானம், விண்ணவர் தவத்தின் மேவி தோய் படைத் தொழிலால் யார்க்கும் துயர் துடைத்தானை நோக்கி வாய் படைத்துடைதார் எல்லாம் வாழ்த்தினார்; வணக்கம் செய்தார்”

  • ్మ* *్మ**్మ*

33. இராம இராவணப் போர் “கருமமும் கடைக்கண் உறுஞானமும் அருமை சேரும் அவிஞ்ஞையும் விஞ்ஞையும் பெருமைசால் கொடும் பாவமும், பேர்கலாத் தருமமும் எனச் சென்று எதிர்தாக்கினார்” இவ்வாறு அறிவும் அறியாமையும், ஞானமும், அஞ்ஞானமும், தருமமும் அதருமமும் எதிர்எதிர் நின்று மோதுவதைப் போல இராமனும் இராவணனும் நின்று மோதினர். இராவணன் ஏவிய படைகளை யெல்லாம் இராமன் பயனற்று விழும்படி செய்தான். அதனால் இராவணனுடைய பலம் குறைந்தது. அவனுடைய சேனைகளும் அழிந்தன. அப்போது இராவணன் ஒரு மாயக் கணையை இராமன் மீது ஏவினான். அதை எதிர்த்து இராமன் ஞானக் கணையை ஏவினான். இராமன் தன் கணைகளால் இராவணனுடைய தலைகளை சிதரடித்தான். கடைசியில் அயன் படையையும் சக்கரப் படையையும் இணைத்து இராமன் இராவணனுடைய நெஞ்சைக் குறிவைத்து ஏவினான். 'அக்கணத்தின் அயன்படை ஆண்தகைச் சக்கரப்படை யோடும்தழிஇச் சென்று புக்கது அக்கொடி யோன்உரம், பூமியும் திக்கனைத்தும், விசும்பும் திரிந்தவே’’ இராம பாணத்தினால் வீழ்ந்த இராவணனைப் பற்றி ஒரு அற்புதமான காட்சியை கம்பர் பிரான் காட்டுகிறார்.