பக்கம்:கம்ப நாடன் காவியத்தில் காதலும் பெருங்காதலும்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ.சீனிவாசன் xxiii இருந்து, பசியால் இடர் உழந்தவாகள் எய்தும் அருந்தும் அமுது ஆகியது; அறத்தவரை அண்மும் விருந்தும் எனல் ஆகியது; வியும் உயிர் மீளும் மருந்தும் எனல் ஆகியது; வாழி! மணி ஆழி!' என்று மிக அற்புதமாகக் கம்பர் சீதையின் உள்ளக் கிடக்கையை அவள் அடைந்த மகிழ்ச்சி உணர்வை விவரித்துக் கூறுகிறார். அதே போல சூளாமணியை அனுமன் இராமனிடம் கொடுத்த போது இராம பிரானுடைய உணர்வுநிலை பற்றிக் கம்பருடைய அருங்கவிதை மிகவும் அற்புதமானவை. 'பைப்பையப் பயந்த காமம் பரிணமித்து உயர்ந்து பொங்கி, மெய் உற வெதும்பி உள்ளம் மெலிவு உறும் நிலையை விட்டான்; அய்யனுக்கு அங்கி முன்னர் அங்கையால் பற்றும் நங்கை கை எனல் ஆயிற்று அன்றே கை புக்க மணியின் காட்சி' இராமபிரான் சூளாமணியைக் கையில் வாங்கிய போது, சீதையே நேரில் வந்து தனது கரங்களால் தனது கைகளைப் பிடிப்பது போன்ற உணர்வுகளைப் பெற்றதாகக் கம்பன் குறிப்பிடுவது அற்புதமான காட்சி யாகும். இன்னும் இராமனுக்கு ஏற்பட்ட உணர்வை மேலும் கம்பர் கூறுகிறார். 'பொடித்தன. உரோமம் போந்து பொழிந்தன கண்ணிர், பொங்கித் துடித்தன மார்பும் தோளும்; தேன்றின வியர்வின் துள்ளி; மடித்தது மணவாய் ஆவி வருவது போவது ஆகித் தடித்தது மேனி; என்னே! யார் உளர் தன்மை தேர்வார்’ என்று குறிப்பிடுகிறார். கடவுள் யார், இன்னார் என்பதைப் பிரகலாதன் தனது தந்தையிடம் கூறுகிறான், 'உலகு தந்தானும், பல்வேறு உயிர்கள் தந்தானும், உள் உற்று அலைவு இலா உயிர்கள் தோறும் அங்கங்கே உறைகின்றானும், மலரில் மணமும் எள்ளில் எண்ணையும், போல எங்கும் அலகில் பல்பொருளும் பற்றி முற்றிய அரிகாண்! அத்தா' என்றும்,