பக்கம்:கம்ப நாடன் காவியத்தில் காதலும் பெருங்காதலும்.pdf/321

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- # அசினிவாசன் 281 பழிப்பிலள் என்றனன் பழியும் இன்று இனிக் கழிப்பிலள், என்றனன் கருணை உள்ளத்தான்” என்று கம்பன் குறிப்பிடுகிறார். சிதையின் கற்பின் முழுவடிவம் சிதையின் கற்பின் முழுவடிவம் இங்கு காட்சியளிப்பதைக் காண்கிறோம். பாரதப் பெருமையின் முழுமையான பரிமாணங்கள் அனைத்தையும் இங்கு நாம் காண்கிறோம். |ான்முகன் தோன்றி ‘'எமையும் மூன்று உலகையும் ஈன்று மனையின் மாட்சியை வளர்த்த எம் மோயினை (எம் அன்னையை) வவா முனையல் (வெறுக்காதே) என்று கூறுகிறார். சிவபெருமான் தோன்றி “அன்னை சீதையாம் மாது நின் மார்பில் வlது அமைந்தாள், துறக்கும் தன்மையள் அல்லள்’ என்று கூறினார். தசரதன் வானத்திலிருந்து இரங்கி வந்து இராமனைத் தழுவிக் கொண்டான் சீதையை வேண்டிக் கொண்டான். 'நங்கை மற்று நின் கற்பினை உலகுக்கு நாட்ட அங்கி புக்கிடு என்று உரைத்தது, அது மனது அடையேல் சங்கை உற்றவர் தேறுவது உண்டு; அது சரதம்; கங்கை நாடு உடைக் கணவனை முனிவுறக் கருதேல்” என்றும். 'பொன்னைத் தீயிடைப் பெய்வது, அப்பொன்னுடைத் துய்மை தன்னைக் காட்டுதற்கு என்பது மனக் கொடல் தகுதி உன்னைக் காட்டினன் கற்பினுக்கு அரசி என்று உலகில் பின்னைக் காட்டுதற்கு அரியது என்று எண்ணி'இப்பெரியோன் கூறியதை ஆறுதல் மொழியாகக் கம்பன் மிகச் சிறப்பாகக் கூறி முடிக்கிறார். "பெண் பிறந்தவர் அருந்ததியே முதற் பெருமைப் பண்பு இறந்தவர்க்கு அருங்கலம் ஆகிய பாவாய்! மண் பிறந்தகம் உனக்கு; நீ வானின்றும் வந்தாய்! ாண்பு இறந்த நின் குணங்களுக்கு இனி இழுக்கு இலை, யால்”