பக்கம்:கம்ப நாடன் காவியத்தில் காதலும் பெருங்காதலும்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ.சனிவாசன 3 வெளிப்படுத்துகின்றன. அதையே கம்பன் தனது காவியத்தின் கடவுள் வாழ்த்துப் பாடலில் “உலகம் யாவையும் தாமுள ஆக்கலும் நிலை பெறுத்தலும் நீக்கலும்’ என்று குறிப்பிட்டுள்ளதைக் காண்கிறோம். பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகியோரை மும் மூர்த்திகளாக நாம் வணங்குகிறோம். அவர்களை முறையே கலைமகள், திருமகள், மலைமகள் ஆகியோரை இணைத்து நாம் வழிபடுகிறோம். இதில் பிரம்மாவின் நாவில் கலைமகள் வீற்றிருக்கிறார். பிரம்ம தேவனுக்கென்று பிரபலமாகத் தனிக் கோயில்கள் இல்லாவிட்டாலும் கலைமகளை நாம் நமது இல்லந்தோறும் வைத்துப் பூஜிக்கிறோம். நவராத்திரி விழாவில் கலைமகள் (சரஸ்வதி) முதலிடம் பெறுகிறார். நமது மகாகவி பாரதி கலைமகள், கலைவாணி வணக்கத்திற்கு முதலிடம் கொடுத்துள்ளார். சிவனைக் குறிக்கும் போது உமாமகேஷ்வரன் என்றும் உமாபதி என்றும் திருமாலைக் குறிப்பிடும் போது லட்சுமி நாராயணன் என்றும் லட்சுமி நரசிம்மன் என்று இராதாகிருஷ்ணன் என்றும் சீதாராமன் என்றும் ரீநிவாசன் (திரு உறைமார்பன்) என்றும் குறிப்பிடுகிறோம். நமது சாத்திரங்களின் வழியில் நமது மக்கள், பெண்மைக்கு முதலிடம் கொடுத்து நமது தெய்வங்களை சிறப்பாக வழிபடுகிறார்கள் என்பதையே இவை காட்டுகின்றன. நமது நாட்டின் ஆறுகளையும் நதிகளையும் நமது மக்கள் வெறும் நீர்ப்பாசன சாதனங்களாகவும் குடிநீர்ச் சாதனங்களாகவும் மட்டும் பார்க்கவில்லை. அவைகளை யெல்லாம் பெண் தெய்வங்களாகவே பூஜித்து வருகிறார்கள். சரயுவும், பகீரதியும், கங்கையும் யமுனையும், நர்மதையும் கோதாவரியும், காவிரியும் வையை என்னும் பொய்யாக் குலக்கொடியும் பொருனையும் நமது ஜீவ நதிகள், தெய்வத்திரு நதிகள் நமது பெண் தெய்வங்கள். நாம் வணங்கி பூஜிக்கும் குலக் கொடிகள். காசு அலம்பு முலையவர் மனிதன் ஆறறிவு படைத்தவன். அதுவே மனிதனுடைய தனிச் சிறப்பு. மனிதன் பெறும் முதலறிவுகள் அவனது ஐம்பொறிகளின் செயல்பாடுகளிலிருந்து கிடைக்கின்றன. அந்த ஐம் பொறிகளிலிருந்து கிடைக்கும் பட்டறிவுகளை ஒருமுகப்படுத்தி ஆராய்ந்து ஏற்கனவே சேமித்து வைத்துள்ள அனுபவத்தில்