பக்கம்:கம்ப நாடன் காவியத்தில் காதலும் பெருங்காதலும்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பநாடன் காவியத்தில் 32 >}=== காதலும் பெருங்காதலும் என்ற கைகேயி அறத்தின் வழியின் நின்று கூனிக்குப் பதில் கூறுவதை, கூனி கூறுவதை மறுப்பதைக் கம்பன் மிகச் சிறப்பாகக் குறிப்பிடுகிறார். அத்தகைய கைகேயியும் கூனியின் தொடர்ச்சியான முயற்சியால் வஞ்சகமான சூழ்ச்சியால் மனம் மாறினாள். மண்ணில் வீழ்ந்தாள். பெருமூச்சுவிட்டாள். அப்போது அவளைப் பற்றிக் கம்பன், “மன்றல் அரும் தொடை மன்னன் ஆவி அன்னாள்” என்று குறிப்பிடுகிறார். கைகேயியை தசரத மாமன்னன் உயிருக்கு உயிராக நேசித்தான் அதனால் அவள் மன்னனுடைய உயிரைப் போன்றவள்’ என்று கம்பநாடர் குறிப்பிடுகிறார். இனி, கைகேயி தனது இருவரங்களைக் குறிப்பிட்டுக் கேட்டபோது 'ஏயவரங்கள் இரண்டில், ஒன்றினால் என் சேய் உலகாள்வது; சீதை கேள்வன் ஒன்றால் போய்வனம் ஆள்வது' எனப் புகன்று நின்றாள்; தீயவை யாவையினும் சிறந்த தீயாள்' என்று கம்பநாடர் குறிப்பிடுகிறார். தெய்வக் கற்பினாள், தூயவள், மன்னனுக்கு உயிரானவள், இராமனுக்குச் சிறந்த தாயானவள், இப்போது தீயவை யாவையும் சிறந்த தீயவளாக மாறிவிட்டாள் இன்னும், “நாகம் எனும் கொடியாள் தன் நாவின் வந்த சோகம் விடம்தொடரத் துணுக்கம் எய்தா, ஆகம் அடங்கலும் வெந்து அழிந்து அராவின் வேகம் அடங்கிய வேழம் என்ன வீழ்ந்தான்” என்றும் “பெண் என உட்கும்; பெரும் பழிக்கு நானும், உள்நிறை வெப்பொடு உயிர்த்து உயிர்த்து உலவும் கண் இலன் ஒப்ப அயர்க்கும்; வன்கை வேல்வெம் புண் நுழைகிற்க உழக்கும் ஆனை போல்வான்” என்றும்,