பக்கம்:கம்ப ராமாயண ஆராய்ச்சிக் கட்டுரை.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

34

இனி, பால காண்டம் கடிமணப் படலத்தில் ராமன் செய்துகொண்ட கோலத்தை வருணித்து வரும்போது,

என்றும் நான்முகன் முதல் யாரும், யாவையும்,
நின்ற பேர் இருளினை நீக்கி, நீள் நெறி
சென்று, மீளாக் குறி சேரச் சேர்ந்திடு
தன் திரு நாமத்தைத் தானும் சாத்தியே,

என்று வரும் செய்யுளில் சொல்லும் திருநாமம் சாத்திக் கொள்ளும் வழக்கம் எக்காலத்தில் பிறந்தது என்று விசாரித்ததில், அந்த வழக்கம் ஸ்ரீமந் நாதமுனிகள் காலத்திலேயே இருந்தது என்று வைஷ்ணவ சம்பிரதாயம் அறிந்தவர்கள் எமக்குச் சொன்னார்கள். அது நெடுநாள் பிற்பட்டு உண்டான வழக்கம் என்று ஏற்படும் பக்ஷத்தில் கம்பனுடைய காலத்தை அதற்குப் பின்னேதான் கொண்டு போகும்படி நேரும். அது வரையில் இந்தச் செய்யுள் நாம் ஸ்தாபிக்கிற காலத்தை (சகம் 817-ஐ) வெட்டாது. எப்படியும் உண்மையைக் கண்டுபிடிப்பதே தான் நமது நோக்கமாதலால், கற்றோர் திருநாமம் அணிகிற வழக்கம் எப்பொழுது ஆரம்பித்தது என்பதை நிர்ணயித்து, அவசியமானால் மேலே நாம் சும்பனுக்குத் தீர்மானித்திருக்கிற காலவரையைத் திருத்த வேண்டும் என்கிற எண்ணத்தோடே இந்தச் செய்யுளை இங்கே எடுத்துக் காட்டுகிறோம்.

ஆகையால், ஒப்புக் கொள்ளத்தக்க வேறு ஆக்ஷேபனைகள் தோன்றும் வரையில், கம்பன் சாலி


நூற்றாண்டிலிருந்தவரும், 'வீரசோழிய' உரையாசிரியரும் ஆகிய "பெருந்தேவனார், 'கம்பனாரிடைப் பெருமையுளது' எனவும், சவும், நச்சினார்க்கினியர் 'கம்பன்' எனவும், உதாரணங்கள் காட்டியமையும் கம்பர்க்குள்ள பழமையைக் குறிப்பிக்கின்றன.