36
போட்டிருக்கிற வரம்பைவிட்டுக் கம்பன் எள்ளள வேனும் மாறவில்லை. அந்த அந்தப் போர்களில், பிரசித்தி பெறாத அரக்கர்கள் விஷயத்தில்கூட இன்ன அரக்கனை இன்ன வானரன் கொன்றான் என்று வால்மீகி கூறியபடியே தான் கம்பனும் சொல்லுகிறான். ராம ஜன்மத்தில் ஆரம்பித்து ராவண வதத்தில் (முதல் 6 காண்டங்களை) முடிப்பதும், மத்தியிலுள்ள கதைகளை வால்மீகியிலுள்ள அதே வரிசையில் சொல்லி வருவதும் கம்பனுடைய முறையாக இருக்கிறது.
மற்றப் பாஷைகளில் ராமாயணம் எழுதியிருக்கிற கவிகள் வால்மீகியைத்தான் ஆதாரமாகக் கொண்டிருக்கிறார்களானாலும், அவருடைய போக்கையும் வரிசையையும் மிக ஸ்தூலமாகத்தான் அனுசரித்திருக்கிறார்கள். வங்காளிகளுக்குள் விபீஷணனை ராமபக்தன் என மதிக்காமல் தேசத்துரோகி என்றும், குலத் துரோகி என்றும் நினைப்பதுதான் வழக்கமாக இருக்கிறபடியால், கிருத்திவாஸன் தன் வங்காள ராமாயணத்தில் அம்மதமே கொண்டு எழுதியிருக்கிறான் என நினைக்க எது இருக்கிறது. மதுசூதனதத்தன் என்னும் நவீன வங்காளிக் கவி ராமாயணக் கதையை மேகநாதவதம் என்று பெயரிட்டு, மேல் நாட்டார் காவியம் எழுதும் ரீதியாகக் கதையின் மத்தியில் ஆரம்பித்து, ஆரம்ப சம்பவங்களையெல்லாம் முக்கிய கதாநாயகர் ஒருவர் மற்றொருவர்க்குச் சொல்லும் உபாக்கியானங்களாகச் செய்து எழு தியிருக்கிறான். துளசிதாசர் *'ராமசரிதமனஸ்' - என்ற தன் ஹிந்தி , ராமாயணத்தில் பாலகாண்டத்தைப் பல்வேறு உபாக்கியானங்களைப் புகுத்தி அளவுக்கு மிஞ்கிப் பெருக்கியும் மற்றக் காண்டங்களைச் சுருக்கியும் - செய்திருக்கிறார். தவிர, அவர் யுத்த காண்டத்துக்கு வங்கா காண்டம் என்று பேர் கொடுத்தும், அதற்குப் பின் வரும் சம்பவங்களை உத்தர காண்டம் லவகுச காண்டம் என