பக்கம்:கம்ப ராமாயண ஆராய்ச்சிக் கட்டுரை.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

41

காம்பீரியம் என்று சொல்லுவோம். கம்பன் சிருங்காரம் அழகாகச் சொல்லுகிறான் என்பதில் தடையில்லை. சோகம் சொல்லும் இடங்களிலெல்லாம் நம் கண்களினின்று தாரை தாரையாய்க் கண்ணீர் பெருகும்படி செய்துவிடுகிறான். ஆனால் அவன் வீரத்தையும் வியப்பையும் ரௌத்திரத்தையும் தன் சொந்தமாக்கிக் கொண்டுவிட்டான். இவைதாம் அவனுக்கு இயற்கையாக வரும் ரஸங்கள், அவனுடைய காவியத்துக்குச் சமுத்திரத்தின் இயற்கையும் ஹிமாசலத்தின் தன்மையும் அமைந்துள்ளது. அவனுடைய ராமாயணத்தைப் படிக்கும்போது, மகாபல்லபுரத்துக் கற்கோவில்களைப் பார்க்கும்போதும், சமண பெல்கோளத்துச் சிலையைப் பார்க்கும் போதும், உண்டாகும் உணர்ச்சி உண்டாகிறது. உண்மையில், கம்பன் பல்லவ அரசர்களில் கீழ் வாழ்ந்திராமற் போனாலும், அவர்கள் பெருவாழ்வு. வாழ்ந்த நாட்களுக்கு மிகவும் அணித்தாகத்தான் வாழ்ந்திருக்கிறானாகையால் அவர்கள் காலத்தின் கலைவல்லாளர்க்கு இயற்கையானதாக இருந்த பெரிய தோரணையை அவன் கைக்கொண்டிருக்கிறான்.

அவனுடைய ராமனாகட்டும், சீதையாகட்டும், வாலியாகட்டும், ராவணனாகட்டும், இந்திரஜித்தாகட்டும் எல்லா நாயகர்களும் வால்மீகியிலிருப்பதை விடப் பன்மடங்கு கொண்ட ஆகிருதியுள்ளவர்களாய் இருக்கிறார்கள். இங்கே நாம் சரீர ஆகிருதியைப் பற்றிப் பேசவில்லை - ஆத்மாவை பற்றித்தான் பேசுகிறோம். யுத்த காண்டத்தில் ராவணன் பேசுகிற ஒவ்வொரு வார்த்தையும் மகா நாதம் பொருந்தியுள்ள