உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கம்ப ராமாயண ஆராய்ச்சிக் கட்டுரை.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

42

தாயிருக்கும். சீதையை விட்டு விடு என்று இந்திரஜித்தன் ராவணனிடம் சொன்னபோது,

முன்னையோர் இறந்தார் எல்லாம் இப் பகை முடிப்பர் என்றும்,
பின்னையோர் நின்றார் எல்லாம் வென்றனர் பெயர்வர் என்றும்,
உன்னை நீ அவரை வென்று தருதி என்று உணர்ந்தும் அன்று, ஆல்!
என்னையே நோக்கி யான் இந்நெடும் பகை தேடிக் கொண்டேன் !

என்று ராவணன் சொல்லும் மொழிகளிலுள்ள மறமும் பெருமிதமும் அனேகமாய் எங்கும் பார்க்க முடியாது. ராவணன் முடியுங் காலத்தில் அவன் தோற்றத்தைச் சொல்லுகிற,

தேர் நின்று நெடு நிலத்துச் சிரமும் கீழ்ப்
பட விழுந்தான் சிகரம் போல்வான், என்றும்
வெம் மடங்கல் வெகுண்டு அனைய சினம் அடங்க,
மனம் அடங்க வினையம் வீய,
தெம் அடங்க, பொரு தடக் கைச் செயல் அடங்க,
மயல் அடங்க, ஆற்றல் தேய,
தம் அடங்கு முனிவரையும் தலை அடங்க
நிலை அடங்கச் சாய்த்த தாளின்
மும் மடங்கு பொலிந்தன, அம் முறை துறந்தான்
உயிர் துறந்த முகங்கள், அம்மா!

என்றும் வருகிற செய்யுள்களிலும், இப்பொழுதாவது நரசிங்கப் பெருமானை வணங்கி, "உய்வாய், தந்தையே;” என்று சொன்ன பிரகலாதனைப் பார்த்து,