பக்கம்:கம்ப ராமாயண ஆராய்ச்சிக் கட்டுரை.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

43



"கேள் இது! நீயும் காண, கிளர்ந்த கோளரியின் கேழ் இல்
தோளொடு தாளும் நீக்கி, நின்னையும் துணித்து, பின் என் வாளினைத் தொழுவது அல்லால், வணங்குதல் மகளிர் ஊடல் நாளினும் உளதோ?" என்னா, அண்டங்கள் நடுங்க நக்கான்![1]

என்று இரணியன் சேவகம் பேசும் செய்யுளிலும் உள்ள காம்பீரியத்துக்கு வேறு எத்தனைக் காவியங்களினின்று, உதாரணம் காட்டலாகும்?

தவிர, வால்மீகிதான் நமது ஆரிய நாட்டுக்குச் சீதை என்னும் கற்புக்கரசியைச் சிருஷ்டித்துக் கொடுத்தாரானாலும், அவருடைய சீதையினிடத்தில் சில குறைகளிருக்கின்றன. எந்த இடத்தில் கஷ்டம் நேர்ந்தாலும் கைகேயி சூழ்வினை பலித்ததே, பலித்ததே என்று சொல்லிக்கொண்டே அவளைத் திட்டிக் கொண்டே வருகிறாள். மாரீசன் வாக்கை ராமன் வாக்கு என நினைத்து லக்ஷ்மணனைப் பார்த்துவரச் சொல்லுகையில், அவன் சமாதானம் சொல்ல, சீதை, அவனைப் பார்த்து, "என்னைச் சுவீகரிக்க வேண்டும் என்றேதான் நீ ராமனிடம் செல்லாமல் இங்கே நிற்கிறாய் ” என்றும், " நீ தனியாக ராமனைப் பின் தொடர்ந்து காட்டுக்கு வந்திருப்பதைப் பார்த்தால் என்னைக் காமித்தோ அல்லது பரதனுடைய ஏவுதலினாலோதான் வந்திருக்கிறாய் என நினைக்


  1. 'வணங்குதல் மகளிர் ஊடல் நாளினும் உளதோ' என்பது காம்பீர்யத்தைக் குறைக்கக்கூடிய பாவமானாலும் கூட, முதற்கண் சொல்லிய மொழிகளின் பெருமை இதற்கும் ஓர் ஒளி தந்துவிடுகிறது.