உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கம்ப ராமாயண ஆராய்ச்சிக் கட்டுரை.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

44

கிறேன்" என்றும் சொல்லுகிறாள்.[1] ஆனால் கம்பனுடைய சீதை இந்த மாதிரி அபசுவரமான வார்த்தைகள் சொல்லுவதே கிடையாது. அவள் லக்ஷ்மணனைக் கோவிப்பதைக் கூறும்,

"குற்றம் வீந்த குணத்தின் எம் கோமகன்
மற்றை வாள் அரக்கன் புரி மாயையால்
இற்று வீழ்ந்தனன் என்னவும், என் அயல்
நிற்றியோ, இளையோய், ஒரு நீ !" என்றாள்;


"நின்ற நின் நிலை இது நெறியிற்று அன்று !" என
வன் தறு கண்ணினள் வயிர்த்துக் கூறுவாள்:


"ஒரு பகல் பழகினார் உயிரை ஈவர், ஆல்!
பெரு மகன் உலைவுறு பெற்றி கேட்டு, நீ
வெருவலை! நின்றனை ! வேறு என்! யான் இனி
எரியிடை வீழ்ந்து உயிர் இறப்பல் ஈண்டு!" எனா,


என்ற செய்யுள்களையும், வால்மீகியிலிருந்து மேலே எடுத்துக் காட்டிய காட்டிய வாக்கியங்களையும், ஒத்திட்டுப் பார்க்கும்போது, கம்பன் சீதை வாயினின்று வரும் வார்த்தைகளை எவ்விதம் நிறுத்துப் போடுகிறான் என்பது இனிது விளங்கும்.


  1. இதற்கு லக்ஷ்மணன் சொல்லும் பதிலின் ஆரம்ப வாக்கியமும் நன்றாக இல்லை. அது பின்வருமாறு : "சீதையே, தகாத வார்த்தைகள் நீ சொல்லுவதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. ஸ்திரீகள் இயற்கையாக தர்மத்தினின்று நீங்குகிறவர்களாயும், சபல சித்தர்களாயும், கடூர குணம் உள்ளவர்களாயும், கலகமுண்டாக்குகிறவர்களாயும் இருக்கிறார்கள்".