பக்கம்:கரிகால் வளவன்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

28

ஒவ்வொரு நாளும் அமைச்சர் கூடிப் பேசினர். இரும்பிடர்த்தலையார் இன்று வருவார், நாளை வருவார் என்று எதிர்பார்த்தார்கள். அவர் வந்த பாடில்லை. நாட்டின் அமைதி வர வரக் குலைந்து வந்தது. இப்படியே வரையறையின்றி எவ்வளவு காலம் காத்திருப்பது?

திருமாவளவனுக்கு வந்த ஆபத்து அவர்களுக்குத் தெரியாது. பகைவர்களுக்கோ வளவன் பிழைத்துச் சென்ற செய்தி தெரியாது. தம்முடைய சூழ்ச்சியினால் வளவன் இறந்து போனான் என்றே அவர்கள் எண்ணினார்கள். ஆதலின் அவர்கள் மறைமுகமாகச் செய்து வந்த எதிர்ப்பு வேலைகள் பின்னும் வலி பெற்றன. எங்கேயோ வளர்ந்து வந்த இளவரசன் இப்போது இறந்துவிட்டான் என்ற வதந்தியைப் பரப்பினர். சோழநாட்டில் அது பரவியது. அமைச்சர்கள் காதிலும் விழுந்தது. இதற்கு முன் வந்த வதந்திகளை அவர்கள் பொருட்படுத்தவில்லை. அப்பொழுதெல்லாம் உண்மையை உணர்த்தித் தைரியமூட்ட இரும்பிடர்த்தலையார் இருந்தார். இப்போது அவர் இன்ன இடத்தில் இருக்கிறார் என்றே தெரியவில்லை. ஆகவே, இளவரசன் இறந்து போனான் என்ற வதந்தி அமைச்சர்களின் கருத்துக்குள் நுழைந்தது. அடுத்தபடி, ‘உண்மையாகவே இருக்குமோ?’ என்ற நினைவும் புகுந்தது.

‘ஆம், உண்மையாகவே இருக்கலாம். இளவரசன் இறந்த செய்தியை நமக்கு அறிவிப்பதால் பயன் இல்லை என்று இரும்பிடர்த்தலையார் இருந்து விட்டார் போலும் அன்றி அந்தத் துயரம் தாங்கா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கரிகால்_வளவன்.pdf/34&oldid=1232474" இலிருந்து மீள்விக்கப்பட்டது