பக்கம்:கரிப்பு மணிகள்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராஜம் கிருஷ்ணன் I09

அவளைத் தொடர்ந்து இன்னும் யாரோ ஒடிவரும் அடிச் சத்தம் கேட்கிறது.ஒருவேளை ராமசாமியோ?

‘ஏவுள்ள ஒடாத...ஒடாதவுள்ள?” ராமசாமியின் குரல்தானோ? அவள் மூச்சிறைக்க நிற்கிறாள். அவள் நின்றதும் விரைந்து வந்தவன் அலைபோல் பாய்ந்து அவளை நெருக்கி அணைக்கிறான். முத்தமிடுகிறான். புளித்த கள்ளின் வாடை *6)JFTGROL- . . .

“ஐயோ...ஐயோ, விடுரா, சவமே...’ அவள் திமிருகிறாள். அவனிடமிருந்து விடுவித்துக் கொள்ளக் கைகளைக் கால்களை உதைத்துக் கொள்கிறாள், அவனைப் பிறாண்டுகிறாள். * *

ஆனால் அவன் வெறி கொண்ட பேயாக இருக்கிறான். தேரி..தேரிக்காடு...நெஞ்சு உலர்ந்து போகிறது. பூதமாகத் தலைவிரிச்சிப் பனமரங்கள்...இருள் இரத்தச் கவடுகளையும் துல்லியமாகத் துடைக்கத் துணை செய் கின்றது. போதாதற்கு அப்படி ஒன்றும் இங்கு நடக்கவில்லை என்று கோடானு கோடித் தாரகைகள் கண். சிமிட்டு கின்றன. -

அவள் தேரியின் மண்ணில் கிடக்கிறாள். அந்த அலுமினியம் தூக்குப் பாத்திரத்தின் நினைவு சட்டென்று வருகிற்து. அதற்குள் கூலிப்பணம் இருக்குமே!

“இத இருக்குவுள்ள...!” என்று அவன் அதை எடுத்துக் கொடுக்கிறான். இருட்டில் முகம் தெரியவில்லை.

கொலைகள் நடந்த இடத்தில் ஆவிகள் உலவும் இவன் ஆவியோ, பொட்டவுள்ள...பொட்டவுள்ள...’ என்ற குரல் பயங்கரமான பொருளை உண்ர்த்தச் செவிகளில் டங்டங் கென்று அதிரடிபோல் ஒலிக்கிறது. அவளுக்குக் குபிரென் து அழுகை வருகிறது. உட்கார்ந்து இதயம் வெடிக்க அழுகிறாள். - i

அவன் போகவில்லை. ‘ஏவுள்ள அழுவுற? கூலி கொறச்சிட்டான்னு சொன் னேயில்ல? நா அஞ்சு ரூவா தாரல் ஒனக்கு!"