பக்கம்:கரிப்பு மணிகள்.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராஜம் கிருஷ்ணன் 137

பேரு கெட்டுப்போகும். - இவனை நீங்க வெரட்டலே, இல்ல இங்க நடக்கிற அக்கிரமத்தைத் தடுக்கலன்னா, நானே இந்தப் பயலை வெளியே தள்ளுவ ஒருநா.”

முதலாளி புன்னகை மாறாமல் அவனைப் பார்த்துக் கொண்டிருக்கிறார். நாச்சப்பன், தங்கராக இருவருடைய முகங்களிலும் ஈயாடவில்லை. சோலையும்கூட எட்டி நின்று. பார்த்துக் கொண்டிருக்கிறான்.

பட்டாக படபடவென்று வெடித்துவிட்டுத் தாற்காலிக மாகச் சிறிது ஒய்ந்தாற்போல் ஒர் அமைதி படிகிறது. சட்டென்று ராமசாமிக்குத் தான் அவமானத்துக்குள்ளாகி விட்டாற் போன்று ஒர் உணர்வு குறுக்குகிறது.

முதலாளியானவன் ஒரு கைப்படுக்கையில் இன்னொரு கையை நிறுத்தி அதில் முகத்தை வைத்துக் கொண்டு அவனது கோபத்தை ரசிக்கும் பாவனையில் அமர்ந்திருக் கிறான்.

“இவ்வளவுதானா. இன்னும் இருக்கிறதா?” என்ற பாவம் விழிகளில் விளங்குகிறது.

“ஏம்ப்பா, இந்த அளத்தில் சோலை ஒருவன்தான் பட்டப் பகலில் குடிச்சிட்டு வருவான்னு நினைச்சிருந்தேன், இத்தாளும் சோலையைப் போல்னு தெரியிது. இவன இப்ப நீ கட்டிட்டு வந்ததே சரியில்ல. சரி...நீ போப்பா.போ!’ முதலாளி போகச் சொல்லி சாடை காட்டுகிறான். அவன் இதழ்கள் துடிக்கின்றன: “ஸார்; நான் நீங்க அவமானப்படுத்துவதற்குப் பொறுக் கிறேன். நான் குடிக்கிறவனில்ல. நான் ஒண்னுக் கொண்ணு பேசல. என் புத்தி நல்லாகக்தானிருக்கு. நீங்க தாயமா, இங்க நடக்கிற அக்கிரமங்கள விசாரிக்கணும்னு நான் சொல்றேன். இங்கே பொண்டுவ, வாயில்லாப் பூச்சி சனாச் சீரளியிறா, இவனுக்கு எணங்கலேன்னா அவிய கூலியில மண்ணடிக்கிறா, நீங்க இங்க வேல செய்யிற

o-9