பக்கம்:கரிப்பு மணிகள்.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராஜம் கிருஷ்ணன் 141

யாது. சாயங்காலம் எட்டு மணிக்கு வந்தீங்கன்னா

இருப்பார்.”

ஊரிலதான இருக்காரு?”

“தெரியாது, திருச்செந்துார் போறதாகச் சொன்னாங்க” நீங்க சாயங்காலம் வாங்க!’

ராமசாமி வெளியில் திரும்பப் போகிறான், சண்முகக்

கங்காணியிடம் கூறலாமா என்று நினைக்கிறான். தனக்கு வேலை போனதை இழப்பாகக் கருதி எவரிடமும் புலம்பி முறையிட அவனுக்கு அப்போது பிடிக்கவில்லை. எனவே பொறுத்திருந்து மாலை ஏழுமரிை, சுமாருக்கு தனபாண்டி யனைத் தேடி வருகிறான். அந்த நேரத்தில் வீட்டுச் கற்றுக்குள் யார் யாரெல்லாமோ தலைவருக்காகக் காத்து நிற்கின்றனர். நீலச்சட்டைபோட்ட இளைஞன் ஒருவன் ஒரு நரைமுடிக்காரரிடம், “அஞ்சு மணிக்கி வாங்கன்னாரு.

இந்நேரமாச்சு, காணம்’ என்று கூறிக்கொண்டிருக்கிறான்.

ராமசாமி அருகில் சென்று, “நீங்க எந்த அளக்காரரு” என்று விசாரிக்கிறான்.

இளைஞன் குனிந்து பிடரியைச் சொறிந்து கொள் கிறான். -

“பீங்கான் கம்பெனி...”

  • உப்பளக்காரரில்லையா?”

“இல்...ல.”

“அதுக்கும் இவருதாந் தலைவரா?”

‘ஆமா...’

“தொழிலாளர் தகராறா?’

‘தகராறுதா. அதில்லாம இங்க ஏன் வாரம்?...’ என்று நரைத் தலை கேட்கிறான்.

சற்றைக்கெல்லாம் தலைவர் சைகிளில், வருகிறார். சைகிளைப் பாங்காக நிறுத்துமுன் ஒரு ஆள் வந்து வாங்கித் தள்ளிக் கொண்டு செல்கிறான். புதிய குஞ்சங்கள் கறுப்பும் சிவப்புமாக அலங்கரிக்கும் ஆசனமும் பளபளக்கும் மின்