பக்கம்:கரிப்பு மணிகள்.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

176 கரிப்பு மணிகள்

அவர் அந்தப் பெரிய வீட்டின் முன் வாயிலில் வந்து நிற்கிறார்.

‘விட்ட ஆருமில்லியா?” என்று குரல் கொடுக்கிறார். செங்கமலம் உள்ளிருந்து தலை நீட்டுகிறாள். ‘ஆரு?” ‘கண்ணுசாமி வீட்டில ஆருமில்ல?” - “அல்லாம் வேலைக்கிப் போயிருக்காவ, சாயங்காலம் வந்தியன்னா பார்க்கலாம். ஏட்டி சரசி: ஆருன்னு சாரிச் சிக்க, போ!’

சாசி. பத்து வயசிருக்கும் ஒரு பெண், பித்தானில்லாத கவுனுடன் வாசலுக்கு வருகிறது. -

‘ஆரு...பொன்னாச்சி, அவங்கப்பச்சி கூடவா வேலைக்குப் போயிருக்கா?”

“ஆமா. அல்லாம் போயிருக்காவ.” “பையன்? பச்சை?” ‘அவனும் போயிருக்கா!’ “எந்தப் பக்கம்?” அப்போது செங்கமலம், “யாருடீ அது...” என்று கேட்ட வளாக வெளியே வருகிறாள்.

ஆரு ? வாங்க, பொன்னாச்சி மாமனா? உள்ளாற வாங்க வந்து இருங்க...’ என்று வரவேற்று பெஞ்சியைக் காட்டுகிறாள்.

“ஆமா...இந்தப் பக்கம் வந்தேன் பாத்துட்டுப் போவ லாமின்னு, காலமே மோடமாயிருந்திச்சி, இப்ப என்ன வெயில்!’ என்று வழுக்கை விழுந்த தலையைத் துண்டினால் ஒத்திக் கொள்கிறார். ஆச்சி அவிழ்ந்த கூந்தலை அள்ளிச் செருகிக் கொண்டு அவளுடைய சிம்மாசனமாகிய நார்க் கட்டிலில் அமருகிறாள்.

  • எல்லாரும் சவுரியந்தானா? கண்ணு சாமி ஒடம்பு முடிய லான்னா, எந்தப் பக்கம் வேலைக்குப் போறா?” -

‘அடி சரசி? செம்பில் தாவத்துக்கு நல்ல தண்ணி பானையிலேந்து எடுத்திட்டுவா.ட்டி’ என்று ஏவிவிட்டு