பக்கம்:கரிப்பு மணிகள்.pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராஜம் கிருஷ்ணன் 2II

கப் போயி அறவை மில்லில மிசின் பெல்ட்டில மாட்டிக்: கிட்டிச்சி. மொதலாளிக்கு மனசுக்கு ரொம்பச் சங்கட்டமாப் போச்சி. கூட இன்னுமொரு பொம்பிளயும் ஆம்பிள யாளும். இருந்திருக்காவ. ஓடிவந்து எடுக்குமுன்ன தலமாட்டிக்கிச்சு. வேணும்னு ஆரும் செய்யறதில்ல. எல்லாருக்கும் இது கஷ்டந்தா. மொதலாளி வீட்டில இன்னிக்குக் கலியானப் பேச்சுப் பேச வராக. சொன்ன ஒட்ன ஸ்கூட்டர் எடுத்திட்டு ஒடியாந்தா. பொறவு போலிசெல்லாம் வந்து எழுதிட்டுப் போயிட்டு ஆசுபத்திரிக்குக் கொண்டாந்தா. ஆரயும் குத்தம் சொல்றதுக்கில்ல. அந்தப் பொம்பிள தூக்கக் கலக்கத்தில தெரியாம...விழுந்திட்டா...ன்னு சொல்றானுவ. என்ன பண்ணலாம்?’

முப்பது ஆண்டுகள் ஒரே இடத்தில் வேலை செய்த தொழிலாளிக்கே எந்த ஈட்டுத் தொகையும் கிடைப்ப தில்லையே?

சின்னம்மாளை மண்ணில் புதைத்துவிட்டு அவர்கள் வீடு திரும்புகையில் இரவு மணி ஒன்பதடித்து விடுகிறது. ராமசாமி அன்று வீட்டுப் பக்கமே செல்லவில்லை. அப்பனின் வாயிலி ருந்து ஒரு சொல்லும் வரவில்லை. அழக்கூட தெரியாத சிலையாகிவிட்டார். சிவந்தகனிதான் அவரை முழுகச் செய்து கொண்டுவந்து உட்கார்த்தினான் திண்ணையில்.

சிவந்தகனியின் மனைவி சோறாக்கி வந்து அவர்களுக்: கெல்லாம் போட்டாள்.

ராமசாமியும் படுக்கவில்லை. செங்கமலத்தாச்சியும் உட்கார்ந்திருக்கிறாள்.

“என்ன விட்டுப்போட்டுப் போயிட்டா...நா என்ன பண்ணுவே...’ என்று கண் தெரியாமல் விம்மும் அப்பனைப் பார்த்தாலே பொன்னாச்சிக்கு அழுகை வெடிக்கிறது.