பக்கம்:கரிப்பு மணிகள்.pdf/227

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

224 கரிப்பு மணிகள்

மணப் பெண்ணாக நிற்கிறாள். குஞ்சரியும், வள்ளியும் பாஞ்சாலியும் பச்சையும் அவளைப் பார்த்துக் கொண்டே சுற்றிச்சுற்றி வருகின்றனர். மூங்கில் துறையிலிருந்து குருக்கள் முன்னதாகவே அதிகாலையில் வந்து ஈசுவரனுக்கு அபிடேகம், ஆராதனை முடிக்கிறார். ஓர் புறம் அடுப்பு மூட்டி பொங்கலும் வைத்திருக்கிறார்.

முதல்நாள் காலையில் வேலுதான் சென்று பொன்னாச்சி யையும் குழந்தைகளையும் கூட்டி வந்திருக்கிறான். திருமணம் என்று சொல்லாமலேயே அவர்களை அழைத்து வரச் செய் திருக்கிறார் அவர். ராமசாமி மாலை ஏழு மணி சுமாருக்கு தனபாண்டியுடனும் வெள்ளைச்சாமியுடனும் வந்தான்.

‘அம்மாளைக் கூட்றிட்டுவான்னே?...’ என்று மாமன் கேட்டபோது, அவன் சிரித்து மழுப்பிவிட்டான். அவள் முரண்பாடாகத் தகராறு செய்வாளென்றும், திருமணம் முடித்துக்கூட்டிக் கொண்டுபோனால் போதும் என்றும் மொழிந்தான். காலையில் நேராகக் கோயிலுக்கு வந்து விடுவதாகச் சொல்லிவிட்டு, அவளுக்கு இருபத்தைந்து ரூபாயில் ஒரு சேலையும் ஏழு ரூபாயில் ஒரு ரவிக்கையும் கொண்டுவந்து கொடுத்திருக்கிறான். இரவில் uurrrf யாரையோ பார்க்க வேண்டிய வேலை இருக்கிறதாம். ஏழு மணிக்கு நாங்கூட்டியார...’ என்று தனபாண்டியன் பொறுப் பேற்றுக் கொண்டு சென்றிருக்கிறார். சிலுசிலுத்து ஒடும் ஒடையில் மாமன் முழுகி, வேறு வேட்டியணிந்து பட்டை யாகத் திருநீறு அணிந்து தட்டத்தில் எல்லாவற்றையும் எடுத்து வைக்கிறார். வெண் சம்பங்கியும் அரளியும் ர்ோஜா வும் கட்டிய இரண்டு மாலைகள்-வெற்றிலை பாக்கு, ஒரு ஒப்பு பழம், இரண்டு தேங்காய் எல்லாவற்றுடன் அந்தப் புடவை ரவிக்கை, மாப்பிள்ளைக்கு அவர் வாங்கிவைத்த வேட்டி, துண்டு ஆகியவற்றையும் வைக்கிறார். பின்னர், பத்திரமாகக் கொண்டுவந்திருக்கும் அந்த மங்கிலியத்தை, புதிய சரட்டில் கோத்து அதன் நடுவே வைக்கிறார். தங்க