பக்கம்:கருத்துக் கண்காட்சி.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

100

சாயிபாபா அவர்களுடைய மகிமையைப் பற்றிப் பேச வந்திருக்கும் நான் இந்த ஊருக்கு வந்திருப்பது இது முதல் தடவையல்ல-ஐந்தாவது தடவையாகும். இதற்கு முன் நான்கு முறை இந்த ஊருக்கு விஜயம் செய்துள்ளேன். எப்பொழுது என்று கேட்கின்றீர்களா ! இதோ விவரமாகச் சொல்லுகிறேன்:

நான் இந்த ஊருக்கு முதல் தடவை வந்தபோது எனக்கு வயதும் முப்பது-வருஷமும் ஆயிரத்துத் தொளாயிரத்து முப்பது. அப்போது இந்த ஊரில் பெரிய காற்று மழை அடித்து வெள்ளமும் வந்து விட்டது. நான் ஒன்றும் பிரசங்கம் செய்ய முடியாமல் தெண்டச் சோறு தின்று விட்டுச் சும்மா திரும்பிவிட்டேன்.

நான் இந்த ஊருக்கு இரண்டாவது முறையாக வந்தது, ஆயிரத்துத் தொளாயிரத்து முப்பத்தாறு-மே மாதம் என்று நினைக்கிறேன். அப்போது நான் பிரசங்கம் செய்வதற்காக வரவில்லை. என் பெரிய மாமாவின் பேர்த்தி நாத்தனார் ஓரகத்தி மகளுடைய பாணிக்கிரகண விவாக சுப முகூர்த்தத்திற்காக வந்தேன். இந்த ஊராரின் விருந்தோம்பும் பண்பை அப்போது தான் தெரிந்து கொண்டேன். எவ்வளவு பலமான விருந்து தெரியுமா! வாய் சாப்பிட்டது, வயிறு வாழ்த்துகிறது. யேவ்!

இவ்வாறாகச் சொற்பொழிவாளர் திருவாளர் திருப் புளிசாமியவர்கள் பேசிக்கொண்டிருந்த பொழுது, ‘ஐயா பழைய கதையே பேசிக் கொண்டிருக்கிறீர்களே! இப்போது வந்த கதையைப் பேசுங்கள்!’ என்று கூட்டத்தின் நடுவிலிருந்து ஒரு குரல் எழுந்தது.

இப்படியாகச் சொற்பொழிவாளர் சிலர் கூட்டத்தில் பேசத் தொடங்கிவிடின்,தொடக்கத்தில் நெடுநேரம்பழைய