பக்கம்:கருத்துக் கண்காட்சி.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

115

பொருள் பற்றிய பாடல்களினும் அகப் பொருள் பற்றிய பாடல்களே மிக்கிருந்தன. வீடு திருந்தினால்தானே நாடு திருந்தும்! அவ்வகப்பொருள் பாடல்களுள் மிகவும் சிறந்தனவற்றைத் தேர்ந்தெடுத்துத் தொகுத்து நூலாக்க விரும்பினர். எல்லாவற்றையும் ஒரே நூலாகத் தொகுக்கின், நூலைக் கையாள்வதற்கும் தொடர்ந்து படிப்பதற்கும் தொல்லையாயிருக்கு மாதலின் பல நூல்களாகத் தொகுக்கலாயினர். கிடைத்திருந்த பாடல்களுள், அடியளவால் நீண்ட பாடல்கள், மிகவும் குறுகிய பாடல்கள், நடுத்தரமான பாடல்கள் என மூவகை யிருக்கக் கண்டனர். அம் மூவகைப் பாடல்களையும் ஒத்த எண்ணிக்கையில் மூன்று தனி நூல்களாகத் தொகுக்க விரும்பினர். ஒவ்வொன்றையும் நானூறு பாடல்கள் வீதம் தொகுத்தால் ஏறக்குறைய ஒத்த எண்ணிக்கை வரும்போல் தோன்றியது. எனவே, ஒவ்வொரு வகை அளவிலும் நானுாறு பாடல்கள் தேறும் படியாகத் தேர்ந்தெடுத்துக் கொண்டனர். மூன்று தொகை நூல்கள் உருவாகின. அவற்றிற்குப் பெயர் வைக்க வேண்டுமே!

பதின் மூன்று அடிகட்குக் குறையாமல் முப்பத் தோரடிவரையு முள்ள நானூறு நெடும் பாடல்களின் தொகுப்புக்கு நெடுந்தொகை நானுாறு எனப் பெயரிட்டனர். நான்கு அடிக்குக் குறையாமல் எட்டடிக்கு மிகாமல் உள்ள நானூறு குறுகிய சிறிய பாடல்களின் தொகுப்புக்குக் ‘குறுந் தொகை நானூறு’ எனப் பெயர் வைத்தனர். இவ் விருவகை அளவுக்கும் இடைப்பட்டனவாய் ஒன்பதடிக்குக் குறையாமலும் பன்னிரண்டடிக்கு மிகாமலும் உள்ள நானுரறு பாடல்களின் தொகுப்பு (நல்+திணை= )'நற் றிணை நானூறு’ எனப்பட்டது. ஏதாவது ஒரு பெயர் வைத்தாக வேண்டுமல்லவா? இந்த மூன்று நூல்களையும் இப்படி அடி வரையறை செய்யாமல், பத்தடிக்குக்