பக்கம்:கருத்துக் கண்காட்சி.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

147

கள் கூறக்கூடும். அவர்கள் கூறும் அத்தகைய குற்றங்களைப் பெரும்பாலும் எல்லா நூல்களிலிருந்துமே எடுத்துக்காட்ட முடியும். எனவே, தீய நோக்குடன் நந்தியின் தம்பியருள் ஒருவனால் இந்நூல் பாடப்படவில்லை என்ற புதிய முடிவுக்கு-புரட்சியான முடிவுக்கு-ஏன்-உண்மையான முடிவுக்கு நாம் துணிந்து வரவேண்டும். ஆம்! மற்ற மன்னர்கள் மேல் நூல்கள் பாடியுள்ள புலவர்களைப் போலவே, எவரோ நல்ல புலவர் ஒருவர் நந்தியின்மேல் இக்கலம்பகத்தை இயற்றினார் என்பது தான் உண்மை. ஆனால்அவர் பெயர் அறியப்படவில்லை. இலக்கிய உலகில் இஃதொன்றும் புதுமையில்லை. இதுபோலவே இன்னும் எத்தனையோ நூலாசிரியர்களின் பெயர்கள் இதுவரையும் அறியம் படவேயில்லை. அவர்களின் பட்டியலில் இவரையும் சேர்த்து விடவேண்டும். உண்மை இஃதாயின், நந்திக் கலம்பகத்திற்கும் நந்தியின் சாவுக்குமாக இணைத்துப் போடப்பட்டுள்ள முடிச்சை அவிழ்த்து விடவேண்டுமே? ஆம். இதோ:-

நல்ல புலவர் ஒருவரால் நந்திக்கலம்பகம் இயற்கையாக இயற்றப்பட்டது. அதற்கு அரங்கேற்றம் நடத்த ஆரவாரமாக ஏற்பாடு செய்யப் பெற்றது. நந்திவர்மன் தன்னை மறந்து மகிழ்ச்சி யாரவாரத்தில் ஈடுபட்டிருக்கக் கூடிய இந்த நேரத்தைப் பயன் படுத்திக் கொள்ளப் பங்காளிப் பகைவர்கள் திட்டமிட்டனர். அவர் தம் எண்ணம் ஈடேறியது. தீயிட்டு நந்தியைத் தீர்த்துக்கட்டி விட்டனர். நந்திக் கலம்பக நூலில் ஏதோ குற்றம் இருந்ததால்தான் நந்திக்கு இந்த நிலை ஏற்பட்டது என உலகம் எண்ணியது. நந்திக் கலம்ப்கம் இயற்றப்பட்டதும் அரங்கேற்றம் செய்யப்பட்டதுங் கூடப் பங்காளிப் பகைவர்களின் ஏற்பாடாய்த் தான் இருக்க வேண்டும் என்றும் உலகம்