பக்கம்:கருத்துக் கண்காட்சி.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

166



‘ஏழுளைப் புரவியொ டெழுகதிர் நோக்கிய
சிற்றிலை நெருஞ்சிப் பொற்பூ என்ன
நின்முகக் கிளையினர்’
(கல்லாடம்: 65-14,15,16)


“செங்கதிர் விரும்பும் பைங்கொடி நெருஞ்சிப்
பொன்புனை மலரின் புகற்சி போல்’’.
(பெருங் கதை: 2-4:14,15)


“நிரம்பு கதிர்நேர் நெருஞ்சி யெனத் தன்பால்
திரும்பு விழி ஆயமொடு சென்றாள்’.
(திரு வெங்கை உலா-354.355)

‘வெஞ்சுடர் நோக்கு நெருஞ்சியில்"(பாண்டிக்கோவை)

மேற்காட்டியுள்ள அகச் சான்றுகளால், புலவர்களின் கூர்த்த நோக்கில் நெருஞ்சி ஞாயிறை நோக்கித் திரும்புவது நன்கு தென்பட்டிருக்கிறது-என்பது புலனாகும். நெருஞ்சி யைப் போல் சூரியகாந்தி பழைய இலக்கியங் களில் இடம்பெறாமையால், சூரிய காந்தி பிற்காலத்தது-வெளியி லிருந்து வந்தது-என்று எண்ணத் தோன்றுகிறது.

சூரியகாந்தி, நெருஞ்சி என்னும் இரண்டுமே ஞாயிறை நோக்கிச் சாய்ந்து வணங்கித் திரும்புவதால் ஒரளவு நேரத்தை அறிய உதவுகின்றன. எனவே, இவற்றை நேரம் காட்டிகள்’ என்றும் இயற்கை மணி காட்டிகள் என்றும் இயம்பலாம் அன்றோ? -